Pages

Friday, December 25, 2015

வழிவழி ஓடி

இரவும் பகலும் ஒன்றோடு ஒன்று குலவிக்கொண்டிருந்தது. சர்ச்சின் கடிகாரத்தில் உள்ள பெரிய முள் மணி பன்னிரண்டை தாண்ட முயன்றது ஆனால் சின்ன முள் என்னவோ ஆறில் சாவுகாசமாக அமர்ந்திருந்தது. நேற்றுப் பெய்த மழையில் வீதியெல்லாம் சிறு சிறு குட்டைகளாய் மாறியிருந்தது. நான் அவற்றைத் தாண்டியும், வளைந்தும் போகவேண்டியிருந்தது. ஸ்தோத்திர பாடல்கள் காதில் வந்து நிறைந்தது. எனக்கு முன்னே அவள் நடந்து கொண்டிருந்தாள், சில அடிகள் இடைவெளியிருக்கும்.
என்ன வடிவானவள் அவள். நடக்கும் போது ஒருவித நளினம், கூந்தல் ஆடும் நடனம், ஒருவித களிப்பை எனக்கு ஊட்டியது.
யேய்..கொஞ்சம் நில்லு என்று சற்று உரத்த குரலில் கத்தினேன்.
தலையை திரும்பிப் பார்த்தாள். ஒரு போகம் சோகத்தை அறுவடை செய்ய போதுமான இரண்டு டிஎம்சி கண்ணீரை திறந்துவிட்டாள். மனம் பனிமூட்டத்தில் மாட்டிக்கொண்டது போலவும், கடலின் அடிஅழத்தில் சிக்கி வழிதெரியாமல் தவிப்பது போலவும், திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போலவும், எதிலோமாட்டிக்கொண்டது போலவும் தவித்தது. துன்பம், பயம், கவலையால் கலந்த முகம் போல அவளது முக பாவனை எனக்குத் தோன்றியது. திடுமென அது கடுமையானதாய் மாறிப்போனது, உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.  முன்னை விட அவளது நடையின் வேகம் கூடியிருந்தது. கிட்டத்தட்ட நான் அவள் பின்னால் ஓடுவதுபோல் இருந்தது.
இவ்வளவு சின்ன விசயம். சே..எப்படி இவ்வளவு பெரிதாக மாறி என்னைச் சித்தரவதை பண்ணுகிறது? அதற்க்குள் நான் சர்ச்சின் கதவுகளை கடந்து, அண்ணாச்சி பூக்கடையை நெருங்கி இருந்தேன். அவளோ முருகம்மா பாத்திரக்கடையை தாண்டிவிட்டிருந்தாள். பார்ப்பவர்களுக்கு நாங்கள் இருவரும் ஜாக்கிங் போவதுபோல தோன்றக்கூடும்.
என்ன ஒரு கவர்ச்சி அவள் நடையில். அவளைப் பார்த்தால் நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்பமாண்டார்கள். ஏன் போன வருசம் அவளைக் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று ஒருவன் வந்து நின்றான். ஒருவழியாய் நான் பேசி அவனை அனுப்பி வைத்தேன். அவனோ பத்து மாசமாய் அவளை மனதுக்குள் காதலிப்பதாய் சொல்லி வருந்திக்கொண்டே சென்றான்.
இன்னேரத்துக்கு நான் குளித்து ஆபிஸக்கு ரெடியாகி இருப்பேன். என் குழந்தையோ ஸ்கூலுக்கு ரெடியாகி இருக்கும். நான் இங்கே அவள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் தலையெழுத்து.
ஸ்டேல்லா நிக்கப் போறயா இல்லையா?

காதில் எதுவும் வாங்காமல் அவள் நடப்பதிலே குறியாக இருந்தாள். ஆம் அவள் பெயர் ஸ்டல்லா கார்த்திக். பெயரே போதுமே எல்லாவற்றையும் சொல்ல. அவள் மலையாளி கிறிஸ்டியன், நான் இந்து. நிச்சயம் பண்ண கல்யாணம்தான் நடக்கும்னு எதிர்ப்பாக்கிறது வேடிக்கைதான்.
தினம், தினம் பனிப்போர், போர் அப்புறம் அக்கப்போர். அம்மாவுக்கு ரொம்ப ஆச்சாரமா இருக்கனும். இப்படித்தா டிரஸ் போடனும், இப்படித்தா நடக்கனும். ஆனா ஸ்டெல்லாவுக்கோ, தான் மாடனான பொண்ணு, அவளை யாரும் கட்டிப்போட முடியாதுங்கிற ஒரு எண்ணம். சுருங்கச் சொன்னா, ஸ்டெல்லாவுக்கு எங்க அம்மா ஒரு பழமைவாதி, கொடுமையான மாமியார், காட்டுமிராண்டி, இன்னும் எல்லா கெட்ட வார்த்தையும். எங்க அம்மாவுக்கோ, அவளோரு அடங்காப்பிடாரி, குடும்ப மானத்தைக் கெடுக்கறவ.
கல்யாணம் பண்ணிண கொஞ்ச நாள், அப்படினா பத்து நாள். சுமூகமாகதான் போனது. பின்குறிப்பு:அந்த பத்து நாள் நாங்க ஹானிமூனுக்கு ஊட்டி போய்விட்டோம். ஒரு சேலையை எங்க அம்மா வாங்கி வச்சிருந்தா. ஆனா அப்போ கடைக்காரான் இலவசம்மா பிரச்சனையும் குடுத்திருக்கான்னு தெரியாது. 
எங்க மாமா விருந்து கொடுக்கிறன், வீட்டுக்கு தவறாம நாளைக்கு வந்தடறனும்னு சொல்லிட்டு போனாறு. அவர் அம்மா வழி மாமா. அம்மா புதுச்சேலையைத்தான் கட்டிக்கிட்டு போகனும்னு சொன்னாங்க, அவ என்னடானா சிலிவ்வெஸ் தா போடனும்னா. ஆரம்பம் ஆனது குருசேத்திரப்போர். அதோட உச்சகட்டமா அந்த இளைஞன் ஸ்டெல்லாவுக்கு புரபொஸ்பண்ணின விசயம் பெரிய பிரச்சனையானது.
தாலி, காலுல மெட்டி இதெல்லாம் போட்ட இந்த பிரச்சனை வருமா? எங்க அம்மா ஸ்டெல்லாவக் கேட்டாள்.
அது எல்லாம் போடமுடியாது, நீங்க ஒரு காட்டுமிராண்டி. என்ன எப்ப பார்த்தாலும் இப்படித்தா இருக்கனும்,அப்படித்தா இருக்கணும்னு டார்ச்சார் செய்யறிங்க என்று கத்தினாள் ஸ்டெல்லா.
பொதுவாக நான் யாரோ ஒருவரை சமாதானம் செய்வது வழக்கம் ஆனால் இன்று என் நிலைமை படு மோசம்.
உன்ன பத்து மாசம் பெத்து வளத்தனுதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
கார்த்திக் நான் லவ் பண்ணும் போதே சொன்னேன் இல்ல. என்னால சாதாரண பொண்ணுமாதிரி எல்லாம் இருக்க முடியாதுனு. வாட் நான் சென்ஸ் இஸ் திஸ்? ஐயம் கோங் கோம் என்று மூட்டை முடிச்சை எல்லாம் கட்டத்தொடங்கினாள்.
அப்பப்பா! நான் தவித்த தவிப்பு இருக்கே அந்த கடவுளுக்குதான் வெளிச்சம். ஒருவழியாய் அப்பாதான் காப்பாற்றினார்.
சந்திலிருந்து வண்டி கீரிச்….என்று பிரேக் போட்டு நின்றது. பைக்கில் வந்த ஆசாமி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, லாவகமாக வண்டியைத் திருப்பிவாறு, மனதில் என்னைத் திட்டிவிட்டு சென்றான். அதற்க்குள் ஸ்டெல்லா கம்பன் தெருவைக் கடந்து பிரதான இரமர் தெருவை எட்டியிருந்தாள்.
 சூரியன் சற்று எட்டிப்பார்க்க எத்தனித்திருந்தான். வானம் வெள்ளை வெளேர் என்ற மேகப்பூவை பூத்திருந்தது. பிளைட் ஒன்று பூவிக்குள் சென்று தேனேடுக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல மேகத்துக்கு மேலும் கீழும் சென்றது.
பிளிஸ் நில்லு என்று கத்தியவாறு ஓடினேன்.
வேலைக்கு போன புதிதில், சுவாரசியமில்லாமல் போய்க்கொண்டிருந்து. அப்போதுதான் கவனித்தேன் ஒரு பெண் வருவதும், போவதுமாய் இருப்பதை. என்னைப் பார்ப்பாள், நான் பார்த்தாள் திரும்பிக்கொள்வாள். ரொம்ப நாள் பார்வையிலே போய்க்கொண்டிருந்தது. எனக்கு அவளை பிடித்துப்போக, மனதில்  காதல் முளைவிட்டது போல தோன்றிற்று.
திடுமென ஒருநாள் அவள் எங்க ஆபிஸ்க்கே வந்துட்டா. என்னடா இது? போய் பேசிட வேண்டியதுதான்னு. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போனேன்.
வதனமான நெற்றி, மயக்கும் பார்வை, எழிலான கன்னம், சிறுநகை பூத்த இதழ் இதயத்தை கிழிக்கும் கூரான கூந்தல் .
நா குழரியது.
சட்டென அவள் நீங்க லவ் புரபோஸ் பண்றப்படியிருந்தா. ஐயம் சாரி நா ஆல்ரெடி கமிடேட் என்று சொல்லிவிட்டாள். மனம் பதைபதைத்தது. வியர்வை ஆறானது. என்ன செய்வதேன்றே புரியவில்லை. பின்னால் ஒரே சிரிப்புச் சத்தம், எனக்கோ ரொம்ப கேவலமாக இருந்தது. சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன்.
 நிறையப்பேர் இருக்கக்கூடாது கடவுளே என்று மனதுக்குள்ளே வேண்டினேன்.
வேண்டுதல் பழித்தது. ஆனால் அங்கு ஒரு பெண் நின்றிருந்தாள். பின்னாலில் அவள் பெயர்தான் ஸ்டெல்லா என்று தெரிந்துகொண்டேன்.
ஐயம் சாரி..என்று சொல்லி அந்த இடத்தை மட்டும் விட்டுச் சென்றாள்.  பிறகு அவளே வந்து பேசி அப்புறம் காதலில் விழுந்து, அழுது புலம்பி கல்யாணம் பண்ணி இப்போதும் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
அவளைக் கல்யாணம் செய்யும் போது, அம்மா முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாள். நான் நினைத்துக்கொண்டேன் இவ்வாறாக, கல்யாணம் ஆகி பிள்ளை குட்டி என்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று. ஆனால் இப்போது என்ன செய்வதேன்றே தெரியாமல் தவிக்கிறேன்.
அட! காப்பி சரியா போட மாண்டியானு அம்மா கேட்டாங்க. இதுக்கு மேல இந்த வீட்டுல இருக்க முடியாது கார்த்திக்னு அவளேட கடைசி ஆயுதம், பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்தினாள். வீட்டுக்கு போறேன் கார்த்திக்.
இதோ போறாளே!!
ஒருவழியாய் அவள் நின்றிருந்த பஸ்ஸ்டாப்புக்கு, சில நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தேன்.
இது எல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்கு போய் யாராவது கோபிச்சிகிட்டு போவாங்களா என்றேன்.
நான் சொல்லுவதை கேட்காதது போல, பஸ் வருவதை எட்டிப் பார்த்தாள்.
சாரி மா என்றேன்.
கைகளை கட்டிக்கொண்டு, தன் முகத்தை அவள் தோள்பட்டையில் தேய்த்தாள். பதிலில்லை.
நா என்னதா பண்ணாணும்?
புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தாள். ஏன்? உனக்கு தெரியாதா என்னனு என்பது போல இருந்தது அவள் பார்வை.
சற்று நேரம் நான் பேசினேன், நான் மட்டும் பேசினேன். சில சமயம் அவள் அபினயம் காட்டுவாள். சில சமயம் எந்தவித உணர்ச்சியும் இராது.
ஆட்டோவை நிறுத்தினாள். தாம்பரம் எவ்வளவு பா? என்றாள்.
நூறுவா மா என்றான் அவன்.
என்னது நூறு ரூபாயா? உனக்கே ஓவரா தெரியல என்றாள் கிண்டலாக.
இதோ பாருமா! பேன்ச மழைல, ஏரி குளமேல்லாம் உடைஞ்சு போச்சு, சேலையூரில ரோட்டையே காணோம். பஸ், கிஸ் எல்லாம் வாராது.
கிஸ் என்ற வார்த்தையை அவன் உச்சரிக்கும் போது சற்று முன்னால் நகர்ந்து அவள் அருகே வந்தேன். அவள் முறைத்தாள்.
நான் தா ரிஸ்க்கெடுத்து வந்தேன் என்று தன் தரப்பு நியாத்தை வைத்தான் ஆட்டொ.
அத்தனை பிரச்சனையிலும் காசு அதிகம்பா, ஓவர், வேண்டாம் என்று ஆட்டொவைப் பார்த்தும், என்னைப் பார்த்தும் சொன்னாள்.
பஸ் வரும் திசையை பார்த்து நின்றிருந்தாள். ஆட்டொக்காரனும் அங்கேயே நின்றிருந்தான்.
என்னது ஆதித்யா கிழ விழுந்து, தலை பூரா இரத்தம் வருதா? என்றேன் போனைக் காதில் வைத்தவாறு. முகம் முழுவதும் வருத்த ரேகை ஓடியது.
சட்டென தவிப்பாய் என்னைப் பார்த்தாள், என்னிடம் எதுவும் பேசக்கூடாது என்ற தீர்மானத்தால் வீட்டுக்கு ஓடத்தொடங்கினாள்.
மெதுவாகவே போகலாம். எப்படியும் இவள் பின்னால் ஓடமுடியாது என்றேண்ணிக்கொண்டேன்.
ஆட்டொ முகம் பிரகாசமானது என் கைகளில் இருந்து இருநூறு ரூபாய் நோட்டை வாங்கும்போது.
சார் யாரு அந்த ஆதித்தியா? என்றான் ஆட்டொக்காரன் பணத்தை வாங்கிக்கொண்டவாறு.
எங்களோட பையன் என்றேன் அலட்சியமாக.
என்ன சார் உங்க பையன்னு சொல்றீங்க. தலையெல்லாம் இரத்தம் வழியுது? இப்படி சாதரணமா இருக்கீங்களே சார் என்றான்.

ஏ? உனக்கு மட்டும் தா பொய் சொல்லத் தெரியுமா?

Wednesday, November 18, 2015

ஓவச்செய்தி


பேரமைதியாய் அந்த பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. வானளாவிய மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தது. மரங்களின் பெயர் இன்னதென்று தெரியவில்லை, முன்பின் அறியாத மரமாய் இருந்தது. தீர்த்தமாய் சில துளிகளை மட்டும் மேகம் தெளித்தது. அதைப் பார்க்க மரத்தின் நுனி மேகத்துக்குள் நுழைந்து, தீர்த்தத்தை தெளிக்க வைத்தது போல இருந்தது. காற்று தன்னை தூய்மையாக்கி, பின் எங்களைத் தழுவி மாசுற்று, திரும்பவும் தன்னை தொடர்ந்து தூய்மையாக்கிக் கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மாசு குறையாவுமில்லை, நாங்கள் மாறவுமில்லை.
நீ ஏன் வந்த? கோபமாய் அந்த பெண் நீல நிற சட்டை அணிந்தவனிடம்  கேட்டாள்.
இரண்டு சீட்டுக்கு பின்னால் எப்படா பேசுவாள் என்று காத்துருந்தவனுக்கு சந்தோஷம். நீயே போனதுக்கு அப்புறம் நா மட்டும் இருந்து என்ன பன்னப்போறன்? அதான் வந்துட்டன், மகிழ்ச்சியாய் பதிலுரைத்தான்.
வாளைப் போல நான்கு முடிமட்டும் நெற்றியிலிருந்து கயல்விழிக் கருமணியை மறைத்து, அவள் கூரான மூக்கின் மேல் வாள் சண்டையிட்டது. அந்த முடியின் முனையில் நீல நிற சட்டை அணிந்த பையனின் மனதை கட்டிக்கொண்டு, காற்றுக்கு அது ஊசல்குண்டைப் போல ஆடியது.
முறைத்தால் அவன் உறையடலுக்கு பதிலாய்.
பஸ் கீரிச்சிடும் சத்தம், நிற்க்கப்போகிறது என்பதைச் சொன்னது. அவர்கள் உரையாடல் அதோடு நின்றுவிட்டது.
“நான் வர மாண்டன். என்னைய விடுங்க. சொல்றன் இல்ல வர மாண்டன்னா”. எழுபது வயதிருக்கும் ஒரு பெரியவர் அடம்பிடித்தார். என்னடா இவர் சின்னப் பிள்ளை மாதிரி பண்றார் என மனதுக்குள் தோன்ற வைத்தது. அதற்க்குள் நான்கைந்து பேர் அவரை பஸ்ஸில் வழுக் கட்டாயமாக ஏற்றிவிட்டார்கள். அதுவரை பெரிதாக சத்தம் போட்டவர், மேலே ஏறியதும் அமைதியானர். பஸ் வழக்கம் போல நகர ஆரம்பித்தது.
வெள்ளை நிறத்தில் வேட்டியும், சட்டையும் ஒரு காலத்தில் அணிந்திருப்பார் போல, இப்போது அது செக்க செவேலென்றிருந்தது. பரட்டைத் தலை, தாடி மண்டிப்போன முகமாயிருந்தது. அவர் மூன்றாவது சீட்டில் அமர்ந்ததும், நவ நாகரிக இளைஞன் அந்த சீட்டிலிருந்து எழுந்துகொண்டான். அந்தப் பெரியவர் நாகரிகமற்றவர், நாத்தமடிப்பவர், தன் பக்கத்தில் உட்கார தகுதியில்லாத காட்டுமிராண்டி என்று இளைஞனின் நிழல் என் இடப்புறம் ஜன்னலிலும், அவன் என் வலப்புறச் சீட்டிலும் உட்காரும் போது முனுமுனுத்து அமர்ந்தான். அவன் திரும்பி அவரை ஏற, இறங்கப் பார்த்தான். பிறகு சட்டென தன் முகத்தை திருப்பிக்கொண்டான். அவர் தான் எதுவும் அவமானப்பட்டதாய் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பஸ்சிலிருந்த அனைவரும் அப்படித்தான் பார்த்தார்கள், என்னை உட்ப்பட. தன் இரு கரங்களையும் சீட்டின் கம்பிகளைப் இருகப்பிடித்து, கண்களை மூடினார். நானும் தலையை திருப்பி, பஸ்சுக்கு வெளியே பார்க்க முயன்றேன்.
உயரமாய் வளர்ந்த மரங்களை இங்கு காணவில்லை. இடுப்பு உயரத்திற்க்கு மட்டும் பச்சைப்பசேலேன்று, வேலியைப் போல செடிகள் வளர்ந்திருந்தது. திருஹ்டிப் பொட்டு வைப்பதைப் போல மலர்கள் அந்த செடியின் மேல் மலர்ந்திருந்தது. இருந்த மேகங்களை எல்லாம் விழுங்கிவிட்டு இன்னும் பசி தீராமல், பார்ப்பதைப் போல இருந்தது அந்த நீல நிற வானம். அவனை பார்க்க விரும்பாமலும், ஆனால் அவன் என்ன செய்கிறான் என தெரிந்துகொள்ள விரும்பியும், அவனது நிழலுருவத்தை கவனித்தேன். அவனது நிழலுருவம் தலை சீவியது, சட்டென மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தது.

பஸ் மலையின் மேல் போவதைப் போல உண்ர்ந்தேன். மரங்கள், மேகங்கள், சந்திரன், சூரியன், காற்று, மண் எவற்றையும் காண முடியவில்லை. பால் நிறமாய், கண்களை கூசச் செய்யும் ஒளியுடனிருந்தது. வெற்றிடத்தில் வெள்ளை நிறத்தை அடித்தது போலிருந்தது காட்சி. என்னைப் போலவே எல்லோரும் பஸ் ஜன்னலின் ஊடே ஆர்வமாய்ப் பார்த்தனர். பஸ் தன் இயக்கங்கள் அனைத்தையையும் சட்டென நிறுத்திக்கொண்டது. துடுக்கான அந்தச் சிறுவன் ஒடிப்போய் படிகளில் நின்றுகொண்டு, தன் கால்களில் ஒன்றை மட்டும் நீட்டினான். பிறகு ஊன்றிப்பார்த்தான், நிற்க்க முடிந்தது. எல்லோரும் மற்றவரை மாறிமாறிப் பார்த்துக்கொண்டனர். பிறகு அந்த சிறுவனைத் தொடர்ந்து எல்லோரும் இறங்கியிருந்தனர். பஸ் அந்தரத்தில் நின்றிருந்தது, நாங்களும்.
அதுவரை ஆச்சரியமாக இருந்த எங்களுக்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது. என்னடா இது, இப்படி மாட்டிக்கிட்டோமே? என்பது போல் இருந்தது ஒவ்வோருவரின் பார்வையும்.
“வாருங்கள்” ஓர் அழகான தேவதை எங்களை அழைத்தது. திவ்வியமான முகம், முதுகில் இரண்டு இறக்கை. அந்த இறக்கை அதனுடைய தலையை தட்டுமளவு இருந்தது.
நாங்க எங்க வந்துருக்கிறோம்? இது என்ன இடம்? என்றான் அந்த துடிப்பான சிறுவன், தேவதையைப் பார்த்து. மற்ற அனைவரும் திகிலான பார்வையை மட்டும் தேவதையைப் பார்த்து வீசினோம்.
புன்னகை பூத்த முகத்தோடு பதில் தந்தது. “சொர்க்கத்தில்”.
அப்ப நா செத்துட்டனா? என்று ஒரு சேர கேட்டனர், பஸ்ஸில் வந்த இரண்டு பேரைத்தவிர. ஒருவர் அந்தப் பெரியவர், இன்னோருவர் காவி வேட்டியனிந்த சாமியார்.
எல்லோரைவிடவும் அந்த இளைஞன் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தான்.
“வரிசையில் நின்றுகொள்ளவும்” தேவதை அன்புக் கட்டளையிட்டது.  
அடிபணிந்த எல்லோரும், வரிசைகட்டி நின்றோம். எனக்கு முன்னால் அந்த இளைஞன், அதற்க்கு முன்னால் சாமியார், அதற்க்கும் முன்னால் பெரியவர்.
அந்த தேவதை சட்டென காணாமல் போனது. நாங்கள் மட்டும் வரிசையில் நின்றோம். கண்டிப்பாக பூமியாய் இருந்தால் நின்றிருக்க மாண்டோம். இங்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு நிமிடமும் என்ன ஆகுமோ என்று பயப்பட்டுக்கொண்டே நிற்க்கவேண்டியிருந்தது.
“சந்திர குப்தன் வருகிறார்” என்று ஒரு அசரீரீ நாற்ப்பது முறை அறிவித்தது. கிட்டத்தட்ட எல்லோரும், கனமாக எச்சிலை விழுங்கினர்.
தலையில் வட்டக் குல்லா, வெள்ளை நிறத்தில் சட்டையும், வேட்டியும் கட்டியிருந்தார். கண்கள் தெளிவாகவும், கருணை கொண்டதாகவும் இருந்தது. சந்திர குப்தன் வரிசையின் முன் தோன்றினார். அவருடன் மூன்று தேவதைகளும் வந்திருந்தனர். அவர்கள் பார்க்க பூமியில் வாழும் அழகான பெண்களைப் போல இருந்தனர்.
அவர் ஒவ்வொருவராய், கேட்டும், பதிலுரைத்தும், பின் யாராவதொரு தேவதையின் பக்கம் அனுப்பினார். எங்கள் வரிசை வெகு நேரமாய் நகர்ந்தது. ஒருவழியாய், அந்தப் பெரியவரும், சாமியாரும் வெவ்வெரு வரிசையில் நின்றனர்.
இது என்ன மூன்று வரிசை? இளைஞன் சந்திர குப்தனைப் பார்த்துக் கேட்டான். அவர் பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னதால்தான் இவ்வளவு நேரமானது என்று புரிந்தது. அவன் பேசுவதும், அவர் பதிலளிப்பதும் எனக்கு தெளிவாகக் கேட்டது மற்ற எல்லோரையும் விட.
 அவர் கேள்விக்கு பதிலளிக்க தாயாரானார். இதோ இந்த வரிசை வீடுபேரு அடைந்தவர்களுக்கு என்று சாமியார் நின்றிருந்த வரிசையைக் காட்டினார். இதோ இந்த வரிசை சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கானது என்று பெரியவர் நின்றிருந்த வரிசையைக் காட்டினார். இது நரகத்திற்க்கானவர்களுக்கு, மீண்டும் பிறப்பு-இறப்பு எனும் வரிசையில் மாட்டிக்கொண்டவடர்களுக்கு என்று கடைசி வரிசையைக் காட்டினார்.
சற்று நேரம் நிலவிய அமைதியை உடைத்து அந்த இளைஞனே வினவினான். நான் எந்த வரிசையில் நிற்க்கட்டும்?
சற்றும் யோசிக்காமல், நரகவரிசையைக் காட்டினார் சந்திர குப்தர். நான் நடுங்கிப்போனேன்.
நா ஏன் அந்த வரிசைக்கு போகனும்? அவங்க இரண்டு பேரையைவிடவும் நல்லா படிச்சுருக்கன். அவங்க இரண்டு பேரைவிட எல்லா தெரிஞ்சவன் நான் தா. நீங்க எத வச்சு இப்படி பிரிக்கறீங்க?
அவங்க என்ன பண்ணீணாங்க அப்படி? அழுக்கு துணியும் அவங்களும். பொரிந்து தள்ளிவிட்டான் இளைஞன்.
பதிலுக்கு அவர் கோபப்படவில்லை. சிரித்தார். அவனுக்கு எரிச்சலைத்தான் தந்தது அவர் சிரிப்பு. தன் சாந்த முகம் மாறாமல் பேசத்தொடங்கினார்.
உனக்கு என்ன தெரியும் அப்படி?
நான் படிச்சிருக்கன் என்று தன் டிகிரியை சுட்டிக்காட்டமுயன்றான்.
ஓஓ.. அப்படியா? நாட்டில மதப்பிரச்சனை வர்ரதே. உங்க கருத்தேன்ன?
அது தப்பு. பண்ணக்கூடாது என்றான் இளைஞன்.
அவ்வளவுதானா உங்க கருத்து. படிச்சவர்ன்னு சொன்னிங்க. ம்.. சொல்லுங்க என்றார் சந்திர குப்தர்.

அப்புறம் சொல்ல என்ன இருக்கு? பதிலுக்கு வினவினான்.
படிச்சவன்னு சொன்னீங்க. உலகத்தில நடக்குற பெரிய பிரச்சனையப் பத்தி ஒரு வார்த்தைக்கு மேல பேச முடியல. கேவலமான புன்னகை பூத்தார்.
அப்ப இவங்க இரண்டு பேருக்கும் எல்லாம் தெரிஞ்சுதா சொர்க்கத்திற்க்கும், வீடுபேரும் போறாங்களா? முகத்தை அஸ்டகோணலாக வைத்துக்குகொண்டு கேட்டான் இளைஞன்.
உனக்கு எதுவும் தெரியவாய்ப்பில்லை. காரணம் நீ படிச்சவன். போட்டுக்க ஜீன்ஸ் பேண்டும், பிரண்டேட் சர்ட்டும் இருந்தால் போதும். வெளியில மட்டும் அழகா வச்சுக்கிட்ட, உள்ள எல்லாம் குப்பை, ஒரே நாற்றம் என்றார் அவர்.
ஓ! அப்ப அவங்க என்ன பெரிசா பண்ணீட்டாங்கன்னு நீங்க நினைக்கீறிங்க?
மாறாத சிரிப்பு எப்போதும் அவருடனே இருந்தது. ஏய் இளைஞா! கேள். நன்றாக கேள். ஒருவன் சொர்க்கம் போகவும், நரகம் போகவும் அவனவன் கர்ம்மாதான் காரணம், கர்மா என்றால் அவன் ஆற்றும் கடைமை.
இளைஞனை ஒருமுறை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு தொடர்ந்தார். எவன் ஒருவன் தான் செய்யும் கடைமையில் பிரதிபலன் பாராமலும், பற்றற்றும் அதனை ஆற்றுகிறானோ, அவனே சொர்க்கம் செல்ல தகுதியுடையவன் ஆகிறான்.
 இதோ பார்க்கிறாயே இந்தப் பெரியவர், இவரோரு விவசாயி. இவர் தன்நலம் பாராமல் உழைத்தார், அதான் அவருக்கு கிட்டியிருக்கிறது. சொல்லி முடிக்கும் முன்பு, இளைஞன் சாமியாரைப் பார்த்தான்.
மேலும் கேள்! இவர் என்று சாமியாரைச் சுட்டிக் காட்டி பேசத் ஆரம்பித்தார். இறப்பும்-பிறப்பும் அற்ற நிலையை அடைந்திருக்கிறார். காரணம் சம்சாரியத்திலிருந்து வெளியேறி, பரப்பொருளைக் கண்டுகொண்டார். இந்த உலகத்தில் உள்ளதனைத்தும் மாயை, புலங்களைக்கொண்டு அதை அனுபவிப்பது சிற்றின்பம். ஆனால் பேரின்பம் அவனின்றி யாருமில்லை என்று உணர்ந்தார். அதான் அவர் வீடுபேறு பேற்றார்.
இளைஞனுக்கு அப்போதுதான் விளங்கிற்று தான் பூமியில் செய்த காரியங்கள் அனைத்தும் தன்னை மட்டும் கருதியது. அகங்காரம், குரோதம், காமம். உண்மையில் தன் செயலுக்காக வெட்க்கப்பட்டான்.
தான் கற்றது ஒரு கல்வியேயில்லை. எது நன்மை, தீமை என்று தீர்மானிக்க தெரியவில்லை. உலகத்தைப் பற்றிய அறிவில்லை. வெளிப்புற அழகை ஆராதித்த எனக்கு, உட்புறமுள்ள விசயங்கள் தெளியுறவில்லை. எல்லாம் குப்பையாக இருக்கிறது. உண்மையில் நாற்றமடிக்கிறது, புலம்பியவாறு நரகவரிசையில் தானேபோய் நின்றான் இளைஞன்.
அடுத்தது நான். பின்னால் உள்ளவர்கள் நான் நகரும் முன்பே ஆர்வத்தால் என்னை சந்திர குப்தர் முன் நிறுத்தினர்.
ஏதேனும் கேள்வி உள்ளதா என்று அவர் வினவினார்.
நீங்கள் அழிவற்றவறா? என்றேன்.
எல்லாமே அழியக்கூடியாது. தோற்றமென்று இருந்தால் அழிவு என்பது நிச்சயமானது, அந்த பரம்பொருளைத்தவிர. அவர் ஆதியும், அந்தமும் இல்லாதவர், காலமற்றவர். நான் எல்லாவற்றிற்க்கும் கட்டுப்பட்டவன் ஆவேன் என்றார்.
நான்.. என்று இழுத்ததும் அவர் வாய்விட்டு சிரித்தேவிட்டார் என் பயத்தைக் கண்டு.
எப்படியும் எனக்கு வீடுபேறு வரிசையில்லை. மனம் திகிலடைந்திருந்தது.
அவர் தன் முடிவைச் சொல்ல வாயேடுத்தார். ஆனால் அவர் சொல்லுவது இன்னதேன்று கேட்க்க முடியவில்லை. காதுகளைத் தீட்டி முயன்றுபார்த்தேன். ம்கூம்.. கேட்க்கவேயில்லை.
என்னது திரும்பவும் பஸ் சத்தம் கேட்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன். அவரது குரல் மங்கி, பஸ்ஸின் சத்தம் நன்றாகக் கேட்டது. பஸ்ஸின் கீரிச்சிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கேட்டது. நின்றது பஸ். நீல நிற சட்டைக்காரன் இன்னமும் அந்தப் பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். வயதான ஒரு பெரியவரை நான்கு, ஐந்து பேர் பஸ்ஸில் ஏற்றிவிட்டனர். அவர் மெதுவாக என் பக்கத்தில் வந்தமர்ந்தார். ஏற்க்கனவே நான் பார்த்த அதே உடையில்தான் இருந்தார். அப்போதுதான் என்னை கவனித்தேன். அந்த இளைஞனுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்தது. அப்படியே எனக்கு தூக்கிவாரிப்போட்டது போல இருந்தது. செய்வதறியாமல் தவித்தேன். மனம் மிக்க குழப்பத்திலிருந்தது. பஸ் நகரத்துவங்கியது.
என் கவனத்தை வெளியே செலுத்த முயன்றேன். டூவிலர்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சென்றது. நிறைப்பேர் நடந்துவந்தனர். சரக்கென ஒரு ஆட்டோ என் பார்வைக்கு இடையில் புகுந்தது.
“உன் வாழ்க்கை உன் கையில்” என்று கருப்பு நிறத்தில் கொட்டை எழுத்தில் ஆட்டோ பின்னாடி போட்டிருந்தது. மனம் சஞ்சலப்பட்டது அதைப் பார்த்ததும் நின்றுகொண்டது. அதன் உண்மையான் அர்த்தம் எனக்கு அப்போதுதான் விளங்கிற்று.


Monday, November 16, 2015

நான் யார்? -பகுதி - 11

இருள் ஆக்ரோசமாய் எங்கும் பரவியிருந்தது. என் உடலை காரிருள் தின்றிருந்தது. எல்லா பொருட்களும் தனக்கு முன்னே திரை கட்டிக்கொண்டு என் கண்களிலிருந்து மறைந்தது. என் நினைவுகள் மட்டும் சுடர்விட்டது. பல நாட்கள் அந்த நாய் என்னை அதன் இடத்தில் சேரவிடவில்லை. ஒரு வழியாய் சில தினங்களில் அதன் இடத்தை பங்கு போட்டுக்கொண்டேன். அதற்க்கெதுவும் தீங்கில்லை என்றதும், என்னை ஆதரித்தது. அதன் ஆத்மாவுக்காக இரஞ்சினேன். என் ஆத்மாவை எண்ணி ஏங்கினேன். முகப்பு விளக்கின் வெளிச்சம் தாடியை நக்கி கடந்து சென்றது. அந்த ஒரு நொடி வெளிச்சம் மனதுக்குள் ஏதோ பண்ணியது. இருட்டுக்கு பழகிப்போன கண்களை, நொடி வெளிச்சம் அந்நியமாக்கியது. காற்று மரங்களுடன் சல்லாபித்திருந்தது. சில இலைகள் தலையின் மேல் உதிர்ந்ததும், அன்னாந்து பார்த்தேன். அலைகள் எதுவுமில்லாத நீல நிறக்கடலைப் போல, மேகமில்லாது வானம் இருந்தது. இந்த உடல் நானில்லை, மனம் வேகமாகச் சொல்லியது. பிறகு தீர்மானமாக்கியது. ஆத்மா அந்த வெளிச்சத்தைப் போல, விழும் போது நாம் தெரிகிறோம், அது கடந்ததும் நாம் மறைகிறோம். உயிர் செனிக்கும் வேளையிலே அதன் மரணமும் நிச்சயமாகிறது. வருந்தி என்ன பயன். அப்படியானால் நான் யார்? ஓயாத கேள்வி சுனைநீராய் வந்தது.
ஆதவன் தன் ஜீவ ஆதார கதிரை அடிவானில் எழுப்பினான். கண்கள் நன்கு சிவந்து, விழியைச் சுற்றி கருவளையம் இருந்தது. ஆடாமல் அசையாமல் அப்படியே உட்காந்திருந்தேன். சூரியன் நன்றாக எழுந்து உயரத்திற்க்கு வந்திருந்தான்.
எப்போதும் போல அன்றும் கூட்டம் களைகட்டியிருந்தது பஸ்டாப்பில். ஒரு பஸ் வரும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், அடுத்த பஸ் வரும் மறுபடியும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், என்றாலும் கூட்டம் குறைவின்றி இருந்தது. அந்த கேள்வி மட்டும் மனதுக்குள் ஏதோ பண்ணியது. பசியை மறைத்தது. அந்த கேள்விக்கான விடை மட்டும்தான் உணவாகும் எனப்பட்டது. அவன் வரவில்லை. காமகொடுரமான பார்வையை இனி ஒருபோதும் காணமுடியாதேன்றே தோன்றிற்று. காற்று தன் பங்கிற்க்கு கொஞ்ச மணலை என்மேல் தூவியது. உயிர்கள் பிரியும் போது துயரம் மிக்கதாய் இருக்கிறதே! இந்த துயரத்திற்க்கு ஒரு முடிவில்லையா? நான் இவற்றிலிருந்து விடுபடவேண்டும். நான் யார் என்று அறியவேண்டும் என்று மனம் கொதித்தபோது, நீங்க தெய்வம் சாமி.. தெய்வம் என்று ஒரு நடுத்தர வயது மதிக்கதக்க பெண் கன்னடாவில் சொல்லிக்கொண்டு என்பக்கத்தில் வந்து நின்றிருந்தாள். என் தலையை மெதுவாக தூக்கிப்பார்த்தேன், நேற்றிறவு நான் காப்பாற்றிய இளைஞியும் அவள் பக்கத்தில் நின்றிருந்தாள். முதலில் அவள் சொல்வதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது. என் முகம் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்ப்படவில்லை. நேராய் அவர்களைப்பார்த்தேன்.
அவள் சூடம், பத்தியைப் பற்றி வைத்து, கொஞ்சம் சாப்பாடும் வைத்தாள். அதுவரை துற்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்த இடம் அது முதல் வாசனையானது.
உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறதுனே தெரியல. கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.
நான் பதிலேதும் சொல்லவில்லை.
அவளே தொடர்ந்தாள். சாமிக்கு எப்படி கைமாறு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு, நெடுசானாய் என் கால்களில் விழுந்து வணங்கினாள், அந்த இளைஞியும்.
சூடம் காற்றுக்கு ஆடியது. எல்லோரும் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.
மணம், காமம், இந்தப் பெண், அங்கு நிற்பவர்கள், என் காட்சி எல்லாம் மாயையாய் தோன்றியது. ஒரு நொடி எனக்குள் போரானந்தம் சுரக்க ஆரம்பித்தது.
அந்த வழியாக நடந்து போன சிறுவன் ஒருவன், தன் அம்மாவிம் கைகளைப் பிடித்திக்கொண்டு கேட்டான். “இவரு யாரு?”.

சட்டென சொன்னேன். “நான் கடவுள்”.     

Saturday, November 14, 2015

நான் யார்? -பகுதி - 10

யாரோ போட்ட பிச்சையிலும், பசியை மறக்க முயன்றதாலும் என் உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. இப்பொதேல்லாம் பசியை விட நான் யார்? என்ற கேள்விக்கு தான் விடைதேடி அழைந்தேன். பல பேர்களிடல் கேட்ட போது என்னை பைத்தியமென்று சிரித்துவிட்டுப் போய்விட்டார்கள். சிறிதுகாலம் பசி என்னை வாட்டி எடுத்தது. யாசகம் கேட்க்க மனம் வரவில்லை. எங்கே முதலில் கிடந்தேனோ அங்கேயே தஞ்சமடைந்துவிட்டேன். அந்த நாயுடன் உடன்படிக்கை ஏற்ப்பட்டது. எப்போது என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேனோ அப்போதே என் கடந்த கால நினைவுகளை திரும்பப்பெற்றேன். ஆனால் திரும்ப போக மனம் வரவில்லை. அணிந்திருந்த சட்டை மேலும் கந்தலானது. கால்களை அகல விரித்து, சுவரில் சாய்ந்துவிடுவேன். என் முன்னே நீண்ட சாலை, இடப்புறம் அதன் கிளை பிறிந்து சென்றது. சுவருக்கு பின்னால் பெரிய சிவன் கோயில். சாலையில் நடப்பவர்களுக்காக அந்த நடைமேடை கட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு முனை எங்கோ தொடங்கி, இடப்புறச் சாலையின் தொடக்கத்தில் முடிந்தது. அது முடியுமிடத்தில் பஸ் டாப்பும், அதன் கூரை எங்களுக்கு காவலாகவும் இருந்த்து. சில நேரங்களில் கோயில் சாப்பாடு கிடைக்கும், பல நேரங்களில் நானே கேட்க்காமல் பிச்சையிடுவாற்கள். இப்போதேல்லாம் பாதசாரிகள் என்னைக் கண்டு விலகிப்போவது சாதரணமாகிபோனது. எனக்கு நானே “நான் யார்?” என்று கேட்டுக்கொள்வேன். பதில் கிடைக்காமல் சாலையையும், அதில் போகும் வண்டிகளையும், பாதசாரிகளையும் பார்த்துக்கொண்டே இருப்பேன். யார் முகத்திலும் சந்தோஹ ரேகைகளே பார்க்க முடியவில்லை அந்த ஒருந்தனைத் தவிர. காலையானதும் எங்கள் பக்கத்திலுல்ல பஸ் டாப்பில் நின்றுகொள்வான். காலையில் ஸ்கூல் போகும் சிறுமிகளை வேடிக்கை பார்ப்பான். அவர்கள் போனதும் ஆபிஸ் போகும் பெண்கள் அப்புறம் குடும்ப ஸ்திரிகள். சில நேரம் அவர்களை உரச முற்ப்படுவான். தூர நின்று அவர்கள் மார்பகங்களை வெறிக்கப் பார்ப்பான். காம நோய் முற்றிப்போய் இருந்தது. காமம் தவறானதா? நான் முறைதவறியா செய்துவிட்டேனோ? மாலையிலும் வந்துவிடுவான். பெண்களைப் பார்க்க எந்தேந்த வழியிருக்குக்மோ, எல்லாவற்றையும் முயற்ச்சிப்பான்.
அந்தநாள் வரை எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. திடுமென வானம் பயம்காட்டத் தொடங்கியது. வெண் நிறப்பற்க்களை காட்டி மின்னலேனச் சிரித்தது, பயப்படவில்லை என்றால் இடியென கத்தியது. பாதசாரிகள் பயந்து ஓடினர். நாங்கள் எதற்க்கும் பயப்பட போவதில்லை என்பதைப் போல் உட்காந்திருந்தோம். கோபமடைந்த வானம் தன் அம்புகளை ஏவியது. அன்னாந்து பார்த்தேன் நெற்றியை பதம் பார்த்தது. அடுத்த ஏவுகனைத் தாக்குதல் என் மூக்கின் மேல். மழைத்துளி சிதறியது சிறு சிறு துளியாய். கைகளை நீட்டி அம்புகளை தடுத்தேன். வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு தோல்வியை ஒப்புக்கொண்ட்தாய் என் இரு கைகளையும் உயர்த்திவிட்டேன். மழை அம்பு என் உடலின் எந்த பகுதியையும் மீதமின்றி குத்தியது. தொப்பமாய் நனைந்துவிட்டோம். மின்னல் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருந்தது.
நாய் திடீரென பஸ்டாப்பை பார்த்து குரைக்க ஆரம்பித்தது. எதிரே இருக்கும் காட்சி முற்றிலும் மழையால் நனைக்கப்பட்டிருந்தது. மிரட்டிக்கொண்டிருந்த மின்னல் அதை காட்டிக்கொடுத்தது. முதுகெலும்பில் சில்லிட்டது நான் பார்த்த காட்சி. அவன் தெப்பமாய் நனைந்திருந்த பெண்ணின் உடைகளை உருவி கற்ப்பளிக்க முயன்றுகொண்டிருந்தான். என் கை, கால்கள் உறைந்து போயிருந்தன. அவள் கத்துவதை மழை மறைத்தது எவ்வளவு பெரிய குற்றம்?

வேகமாக எழுந்து ஓடினேன். நாயும் என்னோடு வந்தது. பெறும்பாலும் உடைகளை அவன் களைந்திருந்தான். வெற்று உடம்போடு நாணிக் குறுகி நின்றாள். அவன் கைகளைப் பிடித்து இழுக்கும் போது நாங்கள் உள்ளே நுழைந்துவிட்டோம். அவளை பலவந்தப்படுத்துவதிலேயே அவன் கவனமிருந்ததால், கவனிக்கவில்லை. எனக்கு முன் நாய் அவன் கெண்டைக்காலை பிடித்து இழுத்தது. வலி தாங்காமல் அவன் காலை வேகமாக உதரித்தள்ளினான், நாய் பாய்ந்து போய் நடு சாலையில்விழுந்தது. அதற்க்குள் நான் அவன் கைகளைப் பற்றி இழுத்தேன். அவள் நழுவிக்கொண்டாள். தன் உடைகளை மார்போடு அனைத்துக்கொண்டு வெளியே ஓடினாள். திடுமென அவள் சாலையிலோடியதும், வந்த லாரி நிலை தடுமாறி என்னை நோக்கி ஓடிவந்த நாயின் மேல் இடித்து, அதை சாலையில் போட்ட தாராக மாற்றியது. நான் அவனோடு கைகலப்பில் ஈடுபட்டிருந்தேன். நாய் போட்ட சத்தத்தை திரும்பி பார்க்கும் கண நேரத்தில் அவன் என் பிடியிலிருந்து தப்பியோடினான். இப்போது யாரும் அங்கு இல்லை. என் உற்ற தோழனைக் காணவில்லை. ஓடிச்சென்று சாலையில் பார்த்தேன், அதன் தோல் மட்டும் ஒட்டியிருந்தது. உருவமும் இல்லை அந்த உயிரும் இல்லை. எங்கே போய்த் தேடுவேன்? யாரைப் போய் கேட்ப்பேன்? இந்த மக்களைக் கேட்டால் சிரிப்பார்கள்? என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை. மழை நின்றபாடில்லை. வானத்தைப் பார்த்து கத்தினேன். பதிலுக்கு வானம் இடித்தது, மின்னியது. கால்கள் நடுங்க என் இடத்தில் வந்து சாய்ந்துகொண்டேன். வானம் என் நண்பனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தியது. தனிமையை உணர்ந்தேன். மின்னும் போதேல்லாம் அதன் பற்களைக் காட்டி மிரட்டியது தான் ஞாபகத்திக்கு வந்தது. நாங்கள் இருவரும் உணவை பகிர்ந்துண்ணுவோம். சாப்பாடு குறைவாய் கிடைக்கும் நேரங்களில் அதற்க்கே கொடுத்துவிடுவேன். இன்று அது என்னோடு இல்லை என்பதை நான் நம்பமுடியாமல் சித்தபிரமை பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.

Friday, November 13, 2015

நான் யார்? -பகுதி - 9

இருட்டு வெளிச்சத்துடன் சண்டையிட்டது. வெளிச்சமென்பது தற்காலிகமானது. விடியும் வரை இருள் ஆள்கிறது, விடிந்தபின் வெளிச்சம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்றபோதும் இருள் மனித மனங்களில் சென்று ஒழிந்து கொள்கிறது. மிகுந்த போரட்டத்திற்க்கு பிறகுதான் தெளிவடைய ஆரம்பித்தது. யாரோ உதைத்த பந்து அந்தரத்திலேயே நின்றது. வெள்ளை நிற வேட்டி, சட்டை, துண்டுகளை காய வைத்திருந்தனர். இமைகள் மெதுவாக திறந்து கொள்வதை உணர்ந்தேன். பேரிரைச்சல் ஒன்று என்னுள் நிலவிய அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. கஸ்டப்பட்டு கண்களை அகல விரித்தேன். சரக்குகளை ஏற்றிக்கொண்ட லாரியோன்று கடந்து சென்றது. திசைகளற்ற, காலமில்லா இருளுக்குள் தத்தளித்து, திடுமென தூக்கி வெளிச்சத்தில் எறிந்தது போல் இருந்தது என் விழிப்பு. பிறகு சில நொடி களித்துதான் சுயநிலை தெரியத்துவங்கியது. மெல்ல கைகளை ஊன்றி எழுந்தேன். விடுபட்ட நினைவுகளை ஒட்ட வைக்க முயன்று முடியாமல், சுற்றும் முற்றும் விழித்தேன். சாலையோர திட்டில் படுக்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
யாருடா இவன் என்னோட இடத்தில் படுத்திருக்கிறான் என்பதைப் போல கண்களை இமைக்காமல் பார்த்தது, பக்கத்தில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று. இல்லை, இல்லை நீ என்னோட இடத்தில் படுக்கக் கூடாது என்பதைப் போல தலையை இட வலமாக ஆட்டியத் தொடங்கியது. நான் அதன் கண்களையே உற்று நோக்கியவாறு இருந்தேன்.
நா சொல்றத கேட்க்கமாண்ட? அதன் பற்க்களைக் காட்டி மிரட்டியது. பயத்தில் எழுந்து கொண்டேன். நாய் தன் இடத்தை தக்கவைத்தது.
வேறு வழியின்றி நடந்தேன். பாதசாரிகள் என்னை விட்டு விலகி விலகி சென்றனர். எங்கே போகிறோம், எங்கே இருக்கிறோம் புரியாத அவஸ்தையாய் இருந்தது. ஏன் எல்லோரும் விலகிச் செல்கிறார்கள்? மேலும் குழப்பம். அதுவரை என்னைச் சுற்றி என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்றேல்லாம் பார்த்த நான் என்னை கவனிக்கத் தவறிவிட்டேன்.  முதலில் என் வலது கைச் சட்டையை பார்த்தேன். நீளமாய் கிழிக்கப்பட்டு அதனுடே என் உடல் தெரிந்த்து. அடடே! என்று என்னை முழுவதும் ஆராய்ந்தேன். என் உடலின் வெகு சில பகுதிகளை மட்டுமே அது மறைத்திருந்தது ஏனைய பகுதிகளேல்லாம் பார்வைக்காக திறந்துவிடப்பட்டிருந்தது. என்னைக் கடந்து சென்ற லாரி உபயமாக கொஞ்சம் மணலைக் கொட்டிவிட்டுப் போயிருந்தது. என் நிலையை சுறுக்கமாகச் சொன்னால் அலங்கோலம்.
புரியாத எழுத்துக்கள் கடை போர்ட்டில் நிறைந்திருந்தது. செய்வதறியாது போர்ட்டையே பார்த்து நின்றேன். கடை ஓனர் பணியாளிடம் என்னைக் கைகாட்டி ஏதோ சொன்னார். இதற்க்கு மேல் என்ன நடக்கும் என்பது தெரியும். மீண்டும் நடக்கத் தொடங்கினேன். யாரோ ஒருத்தர் தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டே இருந்தார்கள்.
தலை கின்னேன்று இருந்தது. லேசாக பூமி சுற்றியது. அந்திரத்தில் மிதப்பது பந்தில்லை என்றும், காயங்களுக்கு விசமிடம் சுட்டெரிக்கும் சூரியன் என்றும் தெரிந்தது. கொஞ்ச தூர நடையிலும், இடைவிடாத தேடுதலிலும் ஆங்கில எழுத்திலுல்ல கடை போர்டையும் கண்டுகொண்டேன். சிக்மங்களுர், கர்நாடகம் என்று போட்டிருந்தது.
எப்படி இங்கே வந்தேன்? நான் யார்? தொடர்ந்து என்னுள்ளே கேள்விகள் துளைத்தன. ஒருவேளை பைத்தியமாக இருந்து, தெளிந்துவிட்டேனா? இல்லை தெளிவாக இருந்து, பைத்தியமாகிவிட்டேனா? பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் யோசிப்பார்களோ? ஆம் நான் பைத்தியம் தான். அதனால்தான் எல்லோரும் என்னைக் கண்டு பயந்து விலகிப் போகிறார்கள். மனம் தள்ளாடியது.
போர்ட்டை பார்த்து நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேல் முட்டிக்கொண்டேன். நல்ல வேளை யாரும் அந்தக் காரில் இல்லை. ஏற்க்கனவே காயம்பட்டிருந்த என் கால் முட்டி இப்போது இரத்தத்தை கொட்டியது. வழி தாலாமல், என் முழங்காலை பிடித்தேன். சிறிது நேரம் அதே நிலையில் நின்றிருந்தேன். அடிவயிற்றில் இலேசாக மின்னல் வெட்டியதைப் போல் உணர்ந்தேன். அது வலியாக உருமாறியது. ஒரு கையால் வயிற்றையும் பிடித்துக்கொண்டேன். வலி நேரமாக ஆக அதிகரித்தது. வலியைப் பொறுக்க முடியாமல், குனிந்திருந்த நான் தலையை மட்டும் உயர்த்தி வானத்தைப் பார்த்தேன். தரையிலுல்ல ஜிவன்ங்களும், ஜிவ ஆத்மாக்களும் தான் உதவாது. நீயும் கூடவா என்பதைப் போல வானத்தைப் பார்த்தேன். இவர்களையாவது காண முடியும் ஆனால் நீ மட்டும் தெரியப்போவதில்லை பிறகெங்கே உதவி கேட்ப்பது. வலி தாலாமல் மீண்டும் தலையை சாய்த்தேன். நீண்ட தாடி, முகமே தெரியாத வகையில் மூடியிருந்தது. தலை முடியெல்லாம் எண்ணேயே பார்க்காமல் சூம்பிக் கிடந்தது. சட்டென பின்புறம் திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை. கார் கண்ணாடியில் அந்த உருவத்தை மறுபடியும் உற்றுநோக்கினேன். அது என்னைத்தான் காட்டியது. நானா அது? திடுமென என் பழைய உருவ நினைப்பு என் மனச்சித்திரத்திலிருந்து வெளிவந்தது. திகைப்பில் நான் வலியையெல்லாம் மறந்துவிட்டேன். என் உருவத்தின் மீது நான் கொண்டிருந்த எல்லாம் சுக்கு நூறானது. இது வேறு யாரோ, நான் இல்லை. அது எப்படி கண்ணாடி தவறாகக் காட்டும்? அப்படியானால் இந்த உருவம் என்னுடையதுதானா? அப்படி என்றால் பழைய உருவம் என்னாயிற்று? அப்படியானால் நான் யார்? அந்த உருவமா? இப்படி எண்ணூகிறேனே இந்த நினைப்பா? என்னை மண்ணில் அடையாளப்படுத்தும் பிறப்பினுடே வந்த அடையாளமா? எது? எது? நான் யார்?        

நான் யார்? -பகுதி - 8

மனமுடைந்து, வேறு வழியில்லை என்று யோசித்துக்கொண்டு கட்டிலில் முடங்கியிருந்தேன். இதயம் வெடித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றே தோன்றியது. அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும்? ச்சே.. அவர் என்னைப் பற்றி ஊர் முழுக்க எப்படியேல்லாம் சொல்லிவைத்திருக்கிறார். இது தெரிந்தால் தாங்கமாண்டார். கேவலமான அந்த ஊர்மக்களின் பார்வையை ஒரு முறை நினைத்துப் பார்த்ததும் என் உடலே ஆடியது.
நிசப்தமாய் இருளில் முழ்கியிருந்தது என் அறை. இருட்டோடுதான் சிலநாட்களாய் என் அந்தரங்க விசயங்களை கூறுகிறேன். கேட்க்குமோ? இல்லையோ? அது எனக்குத் தெரியாது ஆனால் கொட்டிவிடுவேன். இன்று என்ன சொல்லியும், மனம் ஆறவில்லை.
கம்பெனியோட நிதிநிலைமைனால.. நாங்க சில பேர.. கொஞ்ச நாளைக்குதா. வேர வழியில்லை. “யூ ஆல் கொய்ங்க் டூ பி ரிமுவுடு பார் சம் டைம்” என்றார் மேனேஜர்.
எனக்கு அப்போதே சற்று சந்தேகம். என்னடா.. கொஞ்சப் பேரை மட்டும் தனியாக கான்பரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு போறாங்களேனு.
என் கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் கேவலமென்று அடக்கிக்கொண்டேன். எனக்கு வேற வேலைனு எதுவும் தெரியாது. ஏதோ படிச்ச, இப்படி வேலை செய்யனும்னு சொன்னாங்க, செய்யறன். அதுக்கு மேல ஒன்னும் தெரியாது. அப்ப நான் வாங்கின டிகிரிக்குனு எதுவும் மதிப்பில்லை. படிக்காதவனுக்கு கூட எதாவது வேலை தெரியும் ஆனா எனக்கு?
சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. பசி வயிற்றைக் கிள்ளினாலும் சாப்பிடத் தோன்றவில்லை. இருளிலே உழன்றுகொண்டிருந்தேன். திடுமென ஒரு கூக்குரல்..அம்மா எனக் கத்தியது. எனக்கு சற்று பரிச்சமான குரலாதலால், என்னை அறியாது ரூமுக்கு வெளியே ஓடினேன்.  
ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. அதன் சிவப்பு நிறக்கொண்டை ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று சொல்லிவது மாதிரி இருந்தது. சற்று நேரம் ஜன்னல் பக்கத்தில் என் காய்ந்துபோன விழிகளை வைத்து பார்த்திருந்தேன். சடலமாக சானுவை ஸ்ரேக்சரில் கிடத்தி எடுத்து வந்தனர். என் காதலைச் சொல்லி ஒரு வாரம் கூட ஆகவில்லை. என்ன ஆச்சோ? நாடி நரம்பொல்லாம் உடைந்து வெளியே வந்ததைப்போல உணர்ந்தேன். கால்கள் நடக்க பலமின்றி தவித்தது. கஹ்டப்பட்டு சானுவின் பிளாக் நோக்கி ஓடினேன்.
நான் போவதற்க்குள் அவளை ஆம்லேன்ஸில் ஏற்றி வைத்திருந்தனர். அடைத்துப்போயிருந்த தொண்டையை பலம்கொண்டு திறந்து வார்த்தையை வரவழைத்தேன். “என்ன ஆச்சு?”.
“சூசைட் பண்ணிக்கிட்டாங்க தூக்கு மாட்டி” என்றார் அலட்சியமாக பக்கத்தில் நின்றிருந்தவர்.
ஆம்புலன்ஸின் பின் ஜன்னல் வழியாக கடைசி முறை அவளது அழகான முகத்தை பார்த்தேன். முகம் விகாரமாகி நாக்கு வெளிவந்திருந்தது. காண சகிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டேன்.
ஏன் இப்படி செய்தாய் சானு? மனம் வினவியது. நான் ஒரு முட்டாள், போனை வேறு ஆப் பண்ணிவச்சுட்டன். ஒருவேளை பேசவேண்டுமேன ஆசைப்பட்டாலும் பட்டிருப்பாள். என் மீதே எனக்கு கோவம் வந்தது.
ஆம்புலன்ஸ் ஒப்பாரிவைத்திக்கொண்டே ஓடியது. அது கண் மறையும்வரை பின் ஜன்னலையே பார்த்து நின்றேன். போலீஸ் ஜீப் உருண்டு வந்து ஆம்புலன்ஸ் நின்ற இடத்தில் நின்றது.
தாமஸின் போலியான அழுகையை பார்க்க முடிந்தது.

நான் நடக்கத் தொடங்கினேன். எங்கே போவது என்று தெரியாமல் நடந்தேன். பசி மயக்கம், கால்கள் தள்ளாடின. கொஞ்ச நேரம் திக்கு தெரிந்தது. இப்போது எதுவும் புலப்படவில்லை.  

Thursday, November 12, 2015

நான் யார்? -பகுதி - 7

இரண்டு சிங்கங்கள் திறந்த வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்ம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்தது. அது அதற்க்கெனவெ காத்திருந்த பெண் சிங்கத்துடன் இணை சேர ஆரம்பித்தது.
அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்காந்திருந்தேன். எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டையானது.
கவிழ்த்த தலையை நிமிர்த்தாமல் எனக்கு பக்கவாட்டு சோபாபில் அமர்ந்திருந்தால் சானு. அவளது எண்ண ஓட்டத்தை கணிக்க முடியாதபடி சிகை அவளுக்கும் எனக்கும் இடையே திரைச்சீலையானது. என் நிலைமை தர்மசங்கடமாய் தோன்றினாலும், நான் செய்வது சரியென்ரே தோன்றிற்று.
ம்.. சொல்லுங்க என்ன விஷயம்? என்றார் தாமஸ், குரலில் எந்தவித உணர்ச்சியும் இன்றி. பொதுவாக வேலைக்கு சிபாரிசு கேட்டு வரும் ஆயிரத்தில் ஒருவன் என நினைத்துவிட்டார் போலும். சானு சொல்லி கேள்விப்பட்டுயிருக்கிறேன்.
மேகத்துக்குள் மறைந்து நிற்க்கும் நிலவைப்போல என் வார்த்தைகள் தெளிவின்றி வந்தது. நா.. சானுவ கல்யாணம் பன்னிக்கலாம்னு. அவளும். வார்த்தை தொடர் வண்டி நின்றுகொண்டது.
சற்று வியப்பானதாய் முகம் மாற பின் சட்டென கோப முகமுடியை எடுத்து மாட்டிக்கொண்டார். ஒருவேளை அவர்க்கு நெற்றிக்கண் இருந்திருந்தால் கண்டிப்பாக சானுவுக்கு அப்புறம் என்னை எரித்திருப்பார். இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் அவள் தலையை கவிழ்ந்திருக்கிறாள் போலும். திட்டத்தான் போகிறார் என்று எண்ணியது தவறாகிப்போனது.
அந்த ஆண் சிங்கம் மெதுவாக எழுந்து நடக்க தொடங்கியது. அடிவாங்கிய சிங்கம் முள் மறைவில் தன் காயங்களை நக்கியது. கேமிரா சற்று தூரத்துக்கு தூக்கப்பட்டதும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்துவிட்டு தாமஸை உற்று நோக்கிணேன். அவரது கண்கள் சிவந்திருந்தது. வேகமாக மூச்சு வாங்கினார். எனக்கு கழுத்து பக்கம் லேசாக வேர்த்தது. சானுவின் மழைத்துளிகளை நிலத்தில் பார்க்க முடிந்தது. எப்படியோ உண்ர்ச்சிகளை காட்டிவிட்டாள்.
தவறான ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் பிறகு தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டார். மனிதன் கோபப்படும் போதுதான் அவன் வளர்ப்பு முறை புரிகிறது.
  “ஆர் யு மேட்? கோ டு கெல்” தாங்கிகொள்ள முடியாதவறாய் தன் கைகளை சோபாபின் மேல் தட்டினார்.
நான் எதிர்பார்த்ததுதான் என்று நினைக்கும் முன்பு சட்டென் பாய்ந்து என் கன்னங்களில் அறைந்தார். ம்றுகன்னத்தை நான் காட்டவில்லை ஆனால் அவரே அறைந்தார்.
சானு பின்புறமாய் கட்டிப்பிடித்து அவரை என்னிடமிருந்து விலக்க முயன்றாள். அவர் திமிரியதால் எதிரே இருந்த சோபாவில் இருவரும் விழுந்தனர். சோபாவின் மேல் சானு, அவள் மடியில் தாமஸ்.
நா கல்யாணம் பன்னிக்கிறேனு சொன்னதும், தாமஸ் சானு மடில உட்காந்துடாரே?
நினைவே வராதபடி ஒரு அறை. அவள் தன் இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டாள். ஏணோ எனக்கு அவரை தடுக்க மனம் வரவில்லை.
எல்லாவற்றையும் இழந்தவர் மாதிரி சானு உட்காந்திருத்த சோபாவில் சாய்ந்தார். கழுத்தை மேல் நோக்கியவாறு காத்தாடியை பார்த்திருந்தார், கைகள் இரண்டையும் சோபவின் கை மேல் கிடத்தியவாறு.
காத்தாடி ஓடும் சத்தம், சானுவின் மெல்லிய விம்மல், சண்டையில் கிழே விழுந்து உருடும் பழச்சாறுக் கோப்பை, அனிமல் பிளனெட்டின் விளம்பரம், தாமஸின் கோப மூச்சு இதை தவிர வேறு எந்த சத்தமும் இன்றி இருந்தது அந்த அறை.
புதிதாய் ஒரு சத்தம். கதவு திறக்கப்பட்டது. சத்ததைக் கேட்டு தலையை வலதுபுறம் திருப்பினேன். நான்கு வயது மதிக்கதக்க சிறுவன் தாமஸை நோக்கி ஓடிவந்தான். நான் இன்னும் வாங்க போராடிக்கொண்டிருக்கும் உயர்தர மடி கனிணியில் கேம் ஓடியதை திறக்கப்பட்ட கதவின் இடைவெளிவழியாக பார்த்தேன்.
தலையை இடதுபுறம் திருப்புவதற்க்குள்ளாக, தாமஸின் மடியில் ஏறிவிட்டிருந்தான் அந்த சிறுவன்.
சானு தன் முகத்தில் வடிந்த கண்ணீரை துடைத்து தெரிந்தாள்.விம்மலை நிறுத்திவிட்டு. முகத்தை எதுவுமே நடக்காத மாதிரி மாற்ற முற்ப்பட்டாள். 
டாட் ஒய் மாம் இஸ் கிரைங்? முகத்தை பாவமாக வைத்துக் கேட்டான். தாமஸ் முகத்தில் அப்படியொரு ஒரு படபடப்பு. இவனுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்க்காக. அவர் ஏதோ சொல்ல முற்படும் முன்னே.
இவரு யாரு? என்றான் சட்டென. இவன் அம்மா அழ நான்தான் காரணம் என்று நினைத்துவிட்டான் போலும்.

Tuesday, November 10, 2015

நான் யார்? -பகுதி - 6

பத்து திங்களும் பழுதுபோலொழிந்தன நாட்கள். எனக்கும் சானுவுக்கும் புதுதாய் உறவு முளைத்திருந்தது. மிக நெருக்கமானதாய் இருந்தது.
சானுவின் கணவர் தாமஸ் சாப்ட்வேரில் கம்பொனியின் ஜென்ரல் மேனேஜராக இருக்கிறார். சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர் ஆனால் உள்ளுர கொடுரமானவர், சானு சொல்லியிருக்கிறாள்.
அவளுக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாய், அப்பாவின் கட்டாயத்தின் பேரில் மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அவன் சுயரூபம் தெரியத் தொடங்கியது. போதைக்கு முழுவதும் தன்னை அர்ப்பனித்திருந்தான். பல பெண்களுடன் தொடர்ப்பு.
சகித்துக்கொள்ள முடியாமல் சானு இதைக் கேட்டேவிட்டாள். நீ செய்யறது சரியில்லை என்று அவனைப் பார்த்து கத்தினாள். ஒரு மாடலை வீட்டுக்கே அழைத்து வந்திருந்தான்.
எது சரியில்லை? உன்னைக் காரு பெலஸ்னு வாழவைக்கறனே அது சரியில்லைங்கிறயா? இல்லை நீ கேட்டாததேல்லாம் வாங்கி தற்ரனே அது சரியில்லையா? சொல்லுடி சொல்லு. கன்னாபின்னாவென்று அடித்தான்,  போதை தலைக்கேறிய பிறகு. அந்த நிகழ்வுக்கு அப்புறம் தினமும் அடிப்பான். பல இடங்களில் சூடு போட்டிருந்தான்.
கெஞ்சிப் பார்த்தாள், மன்றாடிப் பார்த்தாள். அவன் மனம் மாறாவே இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பெறும்பாலுமான நாட்களில் அவன் ஊரிலே இருக்கமாண்டான் என்பதுதான். பிறந்த குழந்தையை அவன் அப்பாவோடு வளரவிட்டுவிட்டான், குழந்தை அவன் சந்தோஹத்துக்கு இடஞ்சலாயிருக்கிறதுவ என்பதற்க்காக. ஒரு கட்டத்துக்கு மேல் எப்படா அவன் வீட்டை விட்டு வெளியே போவான் என்று தோன்றத் தொடங்கியது. வீட்டுக்கு வந்தால் சானு பயப்பட ஆரம்பித்தாள்.
ஒருநாள் முகம் முழுவதும் வீங்கி, இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவள் ஃப்ளட்டின் கதவை பிடித்து நிலைகொள்ள முடியாமல் ஆடிக்கொண்டிருந்தாள். அதிர்ந்து போய் அவள் பக்கம் நெருங்கினேன். கிட்டத்தட்ட சுயநினைவே இல்லாமல் இருந்தாள். என்ன செய்வதேன்றே எனக்கு புலப்படவில்லை. சட்டென உள்ளே புகுந்தேன். பெரிய விசாலமான வீடு, எங்கே போவது, தாமஸ் எங்கே இருக்கிறான்?
தாமஸ்..தாமஸ் கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாக சென்றேன். பதில் எதுவும் வரவில்லை. நான்காவது அறையைத் திறந்ததும் சற்றேறக் குறைய அதிர்ச்சிக்குள்ளானேன். அவன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டிருந்தான். நான் உள்ளே நுளைந்தது தெரிந்தும் இருவரும், தங்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் காட்டிக் கொள்ளவேயில்லை. உறவைத் தொடர்ந்தார்கள். கத்தி எதுவும் அர்த்தமில்லை. சானுவை நோக்கி ஓடினேன். கதவைப் பிடித்தபடி விழுந்திருந்தாள்.
அள்ளிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினேன். இரண்டு நாள் கழித்து வந்தான் தாமஸ். உடனே அவளை டிஸ்ஸார்ச் செய்துகொண்டு போய் வேறு ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். யார் அவளை அங்கு சேர்த்தார்கள், ஒரு தேங்ஸ் சொல்லலாம் என்று கூட தோன்றவில்லை அவனுக்கு. அப்பொது தொடங்கிய எங்கள் உறவு, மிகவும் பலமடைந்துவிட்டது.
முதலில் எல்லாம் அவள் பலமுறை என்னைக் கட்டிக்கொண்டு அழுவாள். கார்த்திக் பணம் தா வாழ்க்கைக்கு முக்கியமா? அதைக் கட்டிக்கிட்டு அவ அழுகிறான். எத எடுத்தாலும், உனக்கு நா அவ்வளவு காஸ்டிலியா அத வாங்கி தந்த இத வாங்கி தந்தன்னு பீத்திக்கிறான். அன்பா ஒரு வார்த்தை கூட பேசல தெரியுமா? கண்ணீர் பிரவாகமாக கொட்டியது.
எனக்கும் தா வாழ்க்கை புரியல. கடசிவரைக்கும் காச சேர்த்தரானுக, கடைசில எல்லாத்தையுவிட்டுடு போய்டறானுக. இந்த சமூகம் என்னடானா நீ இப்படித்தா இருக்கனும்னு சொல்லுது ஆனா யாரும் கடைபிடிச்ச மாதிரி தெரியல.எனக்கும் குழப்பமாகதான் இருக்கு என்று மனசுக்குள் எண்ணினேன்.
சானு நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தாள். நாம ஏன் ஒன்னா சேர்ந்து வாழக்கூடாது. என்னை கல்யாணம் பன்னிக்க என்றாள் சானு.

Monday, November 9, 2015

நான் யார் – பகுதி 5

எரியும் சூரியன், நிலவைப் போல் குளிர்ந்தது. காற்று குளிர்தன்மையை நிலவிடம் இரவல் வாங்கிக்கொண்டு வந்து என் மீது பொழிந்தது. மேகம் நிழற்க்குடையானது. பறவைகள் கானம் புதுவிதமாய் இனித்தது. வில்லில் விடுபட்ட அம்பாய் சில பறவைகள் காற்றை கிழித்துக்கொண்டு வானில் பறந்தோடியது. மரங்கள் இளம்தளிரை வெளிக்காட்டி தன் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்தது. இலவம் பஞ்சு காற்றால் அலைகழிக்கப்பட்டபடி பறந்தது.  
தலையை உயர்த்தி அன்னாந்து பார்த்தேன், யாரோ சூரியனை வெட்டி போட்டது போல பாதி மட்டும் தான் தெரிந்தது மீதியை நான் வாழும் அடுக்கு மாடி கட்டிடம் மறைத்திருந்தது. காற்று வேகமாய் மோதும் போதேல்லாம் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. பரவசமாய் மனமிருந்தது ஆனால் காரணம் புரியவில்லை. தினமொறு ஜென்மம் எடுக்கும் சூரியன் கிட்டத்தட்ட மூப்பு நிலைக்கு வந்திருந்தது. அதனால்தான் குளிர்கிறதே என்னவோ தெரியவில்லை. மனமொறு வெள்ளைப் புரவிலெரிக்கொண்டு திக்கு தெரியாத மகிழ்ச்சிக் காட்டிலோடியது. அழைத்தாலும் இறங்கி வருவதாய் தெரியவில்லை. திடுமென இலவம் பஞ்சு என் வலது கையில் வந்து அப்பிக்கொண்டது. ஆச்சரியம் தாங்காமல் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். துரத்தாமலே ஒட்டிவிட்டதே? இடது தோளிலொரு பட்டாம்பூச்சி தன் அழகிய சிறகுகளை விரித்து வந்தமர்ந்தது. இவைகளேல்லாம் காட்சிப் பிழைகளா? இல்லை உண்மைதானா? மனம் குழம்பியது. என் அப்பார்ட்மென்ட்க்கு வெளியே சற்று சோம்பலை முறிக்க வந்து நின்றவன் நான்.
காட்சிகள் சட்டென நீல நிறமாய் மாறிப்போனது. திகைத்து போனேன் ஒரு நொடி, சுதாரித்த மறு நொடி தலையில் விழுந்த துணியை கைகளால் விலக்கிவிட்டு, வானத்தில் அன்னாந்து பார்த்தேன். சூரியன் இருந்த இடத்தில் சந்திரன் தெரிந்தது. எனக்கு மட்டும் சூரியகிரகணம். கண்களைச் சிமிட்டி அழுத்தமான பார்வையை செலுத்திய போதுதான் கண்டுகொண்டேன் அது சந்திரனில்லை, சந்தனக் காடென்று. இலைகள் உதிர்வதைப் போலிருந்தது அவள் முன் வரிசை பற்க்களை காட்டிச் சிரிக்கும் போது. இலவம் பஞ்சு பயணக் களைப்பை தீர்த்துவிட்டு, பறக்கத் தொடங்கியது. தரையிலே ஆச்சரியமடைந்தவனாய் நின்றேன் நான், வானத்து தேவதையாய் மொட்டமாடியில் அவள், இருவருக்குமிடையில் இலவம் பஞ்சு, அவள் தலைக்கு மேலே இரண்டு பட்டாம்பூச்சி, தேவதையைக் கண்டுவிட்டேன் என்று கீதம் பாடி மேகத்திடம் சொல்லும் நான்கு கிளிகள், அதைக் கேட்டு அவளைத் தீண்டத் துடிக்கும் மோகம் கொண்ட மேகம், மறைந்து நிற்க்கும் ஆதவன். மனமேறிய புரவி முன்னை விட மகிழ்ச்சிக் காட்டில் அதிவேகமாய் ஓடியது. கட்டுப்பாடுகள் கரையுடைந்து போயின.     
தீராதா மோகத்தால், மேகமுருகி மழைத்துளியாய் பூமியை நோக்கி வந்தது. கலவரமடைந்த காற்று அந்த துளியின் திசையை மாற்றி விட்டது. அதன் பயனாய், மழைத்துளி என் நெற்றியைப் பதம் பார்த்தது. தாக்குதலின் தன்மையை வைத்தே அது எவ்வளவு கோபத்தில் உள்ளது என்பது தெரிகிறது, என்றாலும் குளிர்ந்த தன்மையையே அது கடைசியில் விட்டுச் சென்றது. பட்டாப்பூச்சி மாற்றி மாற்றி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பறந்தது. யார் அவள் மேல் உட்காருவது என்ற சண்டையாய் இருக்கும். அதுவரை நான் விழிகளை நகர்த்தாமல் அவள் முகத்திலேலே லயித்திருந்தேன். சந்தேகம் வந்தவனாய் என் இடது தோள்பட்டையை பார்த்தேன், இன்னும் அந்த பட்டாம்பூச்சி அங்கேயேதான் இருந்தது. அதன் பார்வை அவளைக் கண்டிருக்காது போலும். திரும்பவும் மேலே பார்த்தேன். அவள் முகமிருந்த இடத்தில் இப்போது பாதி சூரியன் மட்டும் சுடர்விட்டான். எப்படி மாயமாய் மறைந்து போனால்? கேள்வி மனதிலோரு வியப்பை உண்டுபண்ணியது. கனவாயிருமோ? இல்லை. இருக்க வாய்ப்பேதுமில்லை, சாட்சியாய் என் மீது விழுந்த துணியை கைகளில் உணர்ந்தேன்.
மகிழ்ச்சிக் காட்டில் பயணம் செய்தவனை அந்த சந்தனக் காடு எதிர்கொண்டது சற்றும் எதிர்பாராதவிதமாய்.
ஹாய்! தேன் குரல் காற்றில் தேவகானமாய் வந்தது என் காதுகளுக்கு.
வானத்து தேவதை டீசர்ட்டும், நைட் பேன்ட்டும் போட்டுக் கொண்டு தரைக்கு வந்திறங்கியது. வானத்தைப் பார்த்திருந்தவன், குரல் கேட்டு இடப்பக்கமாய் திரும்பினேன். மிரட்ச்சியுற்ற பட்டாம்பூச்சி பயத்தில் சட்டென பறந்தது என் தோள்பட்டையிலிருந்து. அருகில் நின்ற தேவதை மேல் மோதி வண்ணங்களை சிந்திவிட்டோடியது.
ஒளியே தெரியாத காரிருளில் தள்ளிவிட்டதைப் போலவும், தீவே காணமுடியாத அழியின் அலையில் மிதக்கும் தென்னை மட்டை போலவும், மீளமுடியாத ஒரு இடத்திலிருந்து என் மனதை மீட்டுக்கொண்டு வந்து அவளிடம் புன்னகையைப் பொழிந்தேன். மனம் வார்த்தைகளை தின்றுவிட்டது, பேசமுடியாத ஊமையாகி நின்றேன்.
காற்றின் ஆனந்த ஒலி, மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் கொஞ்சல், சறுகுகள் கார் சக்கரத்தால் நசுக்கப்படும் சத்தம், அதைக் கேட்டு இறக்கையை அடித்து செல்லும் பறவையின் ஒலி, மழைப்பூச்சிகள் கத்தும் சத்தம் இவைகளை தவிர மெளனமாய் இருந்தது.
காத்துக்கு காய வச்சுருந்த துணி கீழ வந்து விழுந்துடுச்சு, கிளிப் மாட்ட மறந்துட்ட என்றாள் மாறாத புன்னகையுடன்.
என் துணியைக் குடு என்று மறைமுகமாக கேட்கிறாள் போல. ஆமா பயங்கர காத்த இருக்கு என்றேன், ஏதோ பேச வேண்டும் என்பதற்க்காகவே பேசியது மாதிரி இருந்தது.
உதடுகளை குவித்து தலையை மேலும், கீழும் ஆட்டினாள்.
துணியை குடுத்துவிடலாமா இல்லை கொஞ்ச நேரம் இப்படியே பேசுவேமா? மனம் கண்ணாம்பூச்சி விளையாடியது. உங்களை எனக்கு முன்னாடியே தெரியும் என்றேன்.
இமைகளை கேள்விக் குறியாக்கி கண்களைச் சுருக்கினால்.
ம்ம்.. போன வாரம் சர்ச்சில் பாத்த.
மறுபடியும் சிறுநகை புரிந்து நான் சொல்லுவதை ஆமொதித்தாள். கொஞ்ச நேரமாய் தன் முகபாவத்திலேயே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்
துணியை கொடுத்துவிடலாமா? ம்கூம்.. நீங்க??
லாஸ்ட் வீக்தா இங்க சிப்ட் ஆனோம். வாட் யூ டூயுங்?
ஒர்க்கிங் இன் சாப்ட்வேர், அவள் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா என்று பார்த்தவாறு பதில் சொன்னேன். வாட் எபோட் யூ?
ஹவுஸ் ஒயிப் என்றாள். மனதில் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது அவள் பதில். பைத பை யுவர் நேம்?
கார்த்திக்..
ஆ.. கார்த்திக் ஐ கெவ் டு கோ.  மீட் யு அஃப்டெர் சம் டைம்.
ஏதுவும் பேச தோணவில்லை. தலையை ஆட்டிக்கொண்டே துணியை அவள் கைகளில் சேர்த்தேன்.
துணிகளை வாங்கிய பின், திரும்பி நடக்க கால்களை தூக்கியவள், சட்டென திரும்பி “ஐயம் சானுதாமஸ்” என்றாள்.

அவள் போய்க்கொண்டுருந்தாள்.