Skip to main content

Posts

Showing posts from November, 2015

ஓவச்செய்தி

பேரமைதியாய் அந்த பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. வானளாவிய மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தது. மரங்களின் பெயர் இன்னதென்று தெரியவில்லை, முன்பின் அறியாத மரமாய் இருந்தது. தீர்த்தமாய் சில துளிகளை மட்டும் மேகம் தெளித்தது. அதைப் பார்க்க மரத்தின் நுனி மேகத்துக்குள் நுழைந்து, தீர்த்தத்தை தெளிக்க வைத்தது போல இருந்தது. காற்று தன்னை தூய்மையாக்கி, பின் எங்களைத் தழுவி மாசுற்று, திரும்பவும் தன்னை தொடர்ந்து தூய்மையாக்கிக் கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மாசு குறையாவுமில்லை, நாங்கள் மாறவுமில்லை. நீ ஏன் வந்த ? கோபமாய் அந்த பெண் நீல நிற சட்டை அணிந்தவனிடம்  கேட்டாள் . இரண்டு சீட்டுக்கு பின்னால் எப்படா பேசுவாள் என்று காத்துருந்தவனுக்கு சந்தோஷம் . நீயே போனதுக்கு அப்புறம் நா மட்டும் இருந்து என்ன பன்னப்போறன் ? அதான் வந்துட்டன் , மகிழ்ச்சியாய் பதிலுரைத்தான் . வாளைப் போல நான்கு முடிமட்டும் நெற்றியிலிருந்து கயல்விழிக் கருமணியை மறைத்து , அவள் கூரான மூக்கின் மேல் வாள் சண்டையிட்டது . அந்த முடியின் முனையில் நீல நிற சட்டை அணிந்த பையனின் மனதை கட்டிக்கொண்டு , காற்றுக்கு அது ஊசல்குண்டைப் போல ஆடியது .

நான் யார்? -பகுதி - 11

இருள் ஆக்ரோசமாய் எங்கும் பரவியிருந்தது. என் உடலை காரிருள் தின்றிருந்தது. எல்லா பொருட்களும் தனக்கு முன்னே திரை கட்டிக்கொண்டு என் கண்களிலிருந்து மறைந்தது. என் நினைவுகள் மட்டும் சுடர்விட்டது. பல நாட்கள் அந்த நாய் என்னை அதன் இடத்தில் சேரவிடவில்லை. ஒரு வழியாய் சில தினங்களில் அதன் இடத்தை பங்கு போட்டுக்கொண்டேன். அதற்க்கெதுவும் தீங்கில்லை என்றதும், என்னை ஆதரித்தது. அதன் ஆத்மாவுக்காக இரஞ்சினேன். என் ஆத்மாவை எண்ணி ஏங்கினேன். முகப்பு விளக்கின் வெளிச்சம் தாடியை நக்கி கடந்து சென்றது. அந்த ஒரு நொடி வெளிச்சம் மனதுக்குள் ஏதோ பண்ணியது. இருட்டுக்கு பழகிப்போன கண்களை, நொடி வெளிச்சம் அந்நியமாக்கியது. காற்று மரங்களுடன் சல்லாபித்திருந்தது. சில இலைகள் தலையின் மேல் உதிர்ந்ததும், அன்னாந்து பார்த்தேன். அலைகள் எதுவுமில்லாத நீல நிறக்கடலைப் போல, மேகமில்லாது வானம் இருந்தது. இந்த உடல் நானில்லை, மனம் வேகமாகச் சொல்லியது. பிறகு தீர்மானமாக்கியது. ஆத்மா அந்த வெளிச்சத்தைப் போல, விழும் போது நாம் தெரிகிறோம், அது கடந்ததும் நாம் மறைகிறோம். உயிர் செனிக்கும் வேளையிலே அதன் மரணமும் நிச்சயமாகிறது. வருந்தி என்ன பயன். அப்படியானால்

நான் யார்? -பகுதி - 10

யாரோ போட்ட பிச்சையிலும், பசியை மறக்க முயன்றதாலும் என் உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. இப்பொதேல்லாம் பசியை விட நான் யார்? என்ற கேள்விக்கு தான் விடைதேடி அழைந்தேன். பல பேர்களிடல் கேட்ட போது என்னை பைத்தியமென்று சிரித்துவிட்டுப் போய்விட்டார்கள். சிறிதுகாலம் பசி என்னை வாட்டி எடுத்தது. யாசகம் கேட்க்க மனம் வரவில்லை. எங்கே முதலில் கிடந்தேனோ அங்கேயே தஞ்சமடைந்துவிட்டேன். அந்த நாயுடன் உடன்படிக்கை ஏற்ப்பட்டது. எப்போது என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேனோ அப்போதே என் கடந்த கால நினைவுகளை திரும்பப்பெற்றேன். ஆனால் திரும்ப போக மனம் வரவில்லை. அணிந்திருந்த சட்டை மேலும் கந்தலானது. கால்களை அகல விரித்து, சுவரில் சாய்ந்துவிடுவேன். என் முன்னே நீண்ட சாலை, இடப்புறம் அதன் கிளை பிறிந்து சென்றது. சுவருக்கு பின்னால் பெரிய சிவன் கோயில். சாலையில் நடப்பவர்களுக்காக அந்த நடைமேடை கட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு முனை எங்கோ தொடங்கி, இடப்புறச் சாலையின் தொடக்கத்தில் முடிந்தது. அது முடியுமிடத்தில் பஸ் டாப்பும், அதன் கூரை எங்களுக்கு காவலாகவும் இருந்த்து. சில நேரங்களில் கோயில் சாப்பாடு கிடைக்கும், பல நேரங்களில் நானே கேட்க்காமல்

நான் யார்? -பகுதி - 9

இருட்டு வெளிச்சத்துடன் சண்டையிட்டது. வெளிச்சமென்பது தற்காலிகமானது. விடியும் வரை இருள் ஆள்கிறது, விடிந்தபின் வெளிச்சம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்றபோதும் இருள் மனித மனங்களில் சென்று ஒழிந்து கொள்கிறது. மிகுந்த போரட்டத்திற்க்கு பிறகுதான் தெளிவடைய ஆரம்பித்தது. யாரோ உதைத்த பந்து அந்தரத்திலேயே நின்றது. வெள்ளை நிற வேட்டி, சட்டை, துண்டுகளை காய வைத்திருந்தனர். இமைகள் மெதுவாக திறந்து கொள்வதை உணர்ந்தேன். பேரிரைச்சல் ஒன்று என்னுள் நிலவிய அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. கஸ்டப்பட்டு கண்களை அகல விரித்தேன். சரக்குகளை ஏற்றிக்கொண்ட லாரியோன்று கடந்து சென்றது. திசைகளற்ற, காலமில்லா இருளுக்குள் தத்தளித்து, திடுமென தூக்கி வெளிச்சத்தில் எறிந்தது போல் இருந்தது என் விழிப்பு. பிறகு சில நொடி களித்துதான் சுயநிலை தெரியத்துவங்கியது. மெல்ல கைகளை ஊன்றி எழுந்தேன். விடுபட்ட நினைவுகளை ஒட்ட வைக்க முயன்று முடியாமல், சுற்றும் முற்றும் விழித்தேன். சாலையோர திட்டில் படுக்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. யாருடா இவன் என்னோட இடத்தில் படுத்திருக்கிறான் என்பதைப் போல கண்களை இமைக்காமல் பார்த்தது, பக்கத்தில் படுத்திருந்த தெ

நான் யார்? -பகுதி - 8

மனமுடைந்து, வேறு வழியில்லை என்று யோசித்துக்கொண்டு கட்டிலில் முடங்கியிருந்தேன். இதயம் வெடித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றே தோன்றியது. அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும்? ச்சே.. அவர் என்னைப் பற்றி ஊர் முழுக்க எப்படியேல்லாம் சொல்லிவைத்திருக்கிறார். இது தெரிந்தால் தாங்கமாண்டார். கேவலமான அந்த ஊர்மக்களின் பார்வையை ஒரு முறை நினைத்துப் பார்த்ததும் என் உடலே ஆடியது. நிசப்தமாய் இருளில் முழ்கியிருந்தது என் அறை. இருட்டோடுதான் சிலநாட்களாய் என் அந்தரங்க விசயங்களை கூறுகிறேன். கேட்க்குமோ? இல்லையோ? அது எனக்குத் தெரியாது ஆனால் கொட்டிவிடுவேன். இன்று என்ன சொல்லியும், மனம் ஆறவில்லை. கம்பெனியோட நிதிநிலைமைனால.. நாங்க சில பேர.. கொஞ்ச நாளைக்குதா. வேர வழியில்லை. “யூ ஆல் கொய்ங்க் டூ பி ரிமுவுடு பார் சம் டைம்” என்றார் மேனேஜர். எனக்கு அப்போதே சற்று சந்தேகம். என்னடா.. கொஞ்சப் பேரை மட்டும் தனியாக கான்பரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு போறாங்களேனு. என் கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் கேவலமென்று அடக்கிக்கொண்டேன். எனக்கு வேற வேலைனு எதுவும் தெரியாது. ஏதோ படிச்ச, இப்படி வேலை செய்யனும்னு சொன்னாங்க, செய

நான் யார்? -பகுதி - 7

இரண்டு சிங்கங்கள் திறந்த வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்ம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்தது. அது அதற்க்கெனவெ காத்திருந்த பெண் சிங்கத்துடன் இணை சேர ஆரம்பித்தது. அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்காந்திருந்தேன். எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டையானது. கவிழ்த்த தலையை நிமிர்த்தாமல் எனக்கு பக்கவாட்டு சோபாபில் அமர்ந்திருந்தால் சானு. அவளது எண்ண ஓட்டத்தை கணிக்க முடியாதபடி சிகை அவளுக்கும் எனக்கும் இடையே திரைச்சீலையானது. என் நிலைமை தர்மசங்கடமாய் தோன்றினாலும், நான் செய்வது சரியென்ர

நான் யார்? -பகுதி - 6

பத்து திங்களும் பழுதுபோலொழிந்தன நாட்கள். எனக்கும் சானுவுக்கும் புதுதாய் உறவு முளைத்திருந்தது. மிக நெருக்கமானதாய் இருந்தது. சானுவின் கணவர் தாமஸ் சாப்ட்வேரில் கம்பொனியின் ஜென்ரல் மேனேஜராக இருக்கிறார். சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர் ஆனால் உள்ளுர கொடுரமானவர், சானு சொல்லியிருக்கிறாள். அவளுக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாய், அப்பாவின் கட்டாயத்தின் பேரில் மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அவன் சுயரூபம் தெரியத் தொடங்கியது. போதைக்கு முழுவதும் தன்னை அர்ப்பனித்திருந்தான். பல பெண்களுடன் தொடர்ப்பு. சகித்துக்கொள்ள முடியாமல் சானு இதைக் கேட்டேவிட்டாள். நீ செய்யறது சரியில்லை என்று அவனைப் பார்த்து கத்தினாள். ஒரு மாடலை வீட்டுக்கே அழைத்து வந்திருந்தான். எது சரியில்லை? உன்னைக் காரு பெலஸ்னு வாழவைக்கறனே அது சரியில்லைங்கிறயா? இல்லை நீ கேட்டாததேல்லாம் வாங்கி தற்ரனே அது சரியில்லையா? சொல்லுடி சொல்லு. கன்னாபின்னாவென்று அடித்தான்,  போதை தலைக்கேறிய பிறகு. அந்த நிகழ்வுக்கு அப்புறம் தினமும் அடிப்பான். பல இடங்களில் சூடு போட்டிருந்தான். கெஞ்சிப் பார்த்தாள், மன்றாடிப் பார்த்தாள்.

நான் யார் – பகுதி 5

எரியும் சூரியன், நிலவைப் போல் குளிர்ந்தது. காற்று குளிர்தன்மையை நிலவிடம் இரவல் வாங்கிக்கொண்டு வந்து என் மீது பொழிந்தது. மேகம் நிழற்க்குடையானது. பறவைகள் கானம் புதுவிதமாய் இனித்தது. வில்லில் விடுபட்ட அம்பாய் சில பறவைகள் காற்றை கிழித்துக்கொண்டு வானில் பறந்தோடியது. மரங்கள் இளம்தளிரை வெளிக்காட்டி தன் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்தது. இலவம் பஞ்சு காற்றால் அலைகழிக்கப்பட்டபடி பறந்தது.   தலையை உயர்த்தி அன்னாந்து பார்த்தேன், யாரோ சூரியனை வெட்டி போட்டது போல பாதி மட்டும் தான் தெரிந்தது மீதியை நான் வாழும் அடுக்கு மாடி கட்டிடம் மறைத்திருந்தது. காற்று வேகமாய் மோதும் போதேல்லாம் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. பரவசமாய் மனமிருந்தது ஆனால் காரணம் புரியவில்லை. தினமொறு ஜென்மம் எடுக்கும் சூரியன் கிட்டத்தட்ட மூப்பு நிலைக்கு வந்திருந்தது. அதனால்தான் குளிர்கிறதே என்னவோ தெரியவில்லை. மனமொறு வெள்ளைப் புரவிலெரிக்கொண்டு திக்கு தெரியாத மகிழ்ச்சிக் காட்டிலோடியது. அழைத்தாலும் இறங்கி வருவதாய் தெரியவில்லை. திடுமென இலவம் பஞ்சு என் வலது கையில் வந்து அப்பிக்கொண்டது. ஆச்சரியம் தாங்காமல் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். துரத்தாமல

நான் யார் – பகுதி 4

ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்.. அந்த அழகான மாலை வேளையில் பார்க்

நான் யார்? பகுதி-3

நீண்ட நேரம் கண் விழித்திருந்ததாலோ என்னவோ தெரியல்லை, கண்கள் லேசாக எரிந்தது. மற்ற நாட்களாயிருந்திருந்தால் சட்டென மனம் கடிகாரத்தை தேடியிருக்கும், கொதி நீராய் கொதித்திருக்கும். விழிகள் விட்டத்திலேயே இன்னும் லயித்திருந்தது. நான் செய்வது சரிதானா? நேற்றைய இரயில் நிலைய நினைவுகள் மனதுக்குள் நிற்க்க ஸ்டெசன் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தது. அது எப்படி தவறாகும்? என்னைப் போன்றவர்கள் செய்தால்தான் தவறா?   இந்த சமூகத்தில் இருக்கும் எல்லா பெரிய மனிதர்களும் அனேகமாக பன்னுகிறார்கள். அவங்க பன்னுனா தப்பில்லையா? ஏன்னா பணம் இருக்கே. எங்கிட்ட இல்ல. அதேப்படி பணம் இருந்த எல்லாம் சரியாகும்? சட்டென பல துண்டுகளாய் சிதறிய அந்த பெண்ணின் உடல் ஞாபகத்திற்க்கு வந்தது. கோர உடலை நினைத்ததும், இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அடிபட்டது அந்த பெண்ணாயில்லாமல் நானாயிருந்திருந்தால். நினைக்கவே ஏதோ போல இருந்தது. என் தலை முடிகள், கை மற்றும் கால் முடிகள் நடனமாடிக் கொண்டிருந்தது பயத்தால். ஆனால் ஏதோ அசட்டுத் தைரியம் “நான் சாகமாண்டன்” அடிமனத்திலிருந்து வந்தது. சாகும் வரை எல்லா மனிதர்களும் தன்னை பூமியில் சாகா வரம் கொண்டவர்