Skip to main content

நான் யார்? பகுதி-3


நீண்ட நேரம் கண் விழித்திருந்ததாலோ என்னவோ தெரியல்லை, கண்கள் லேசாக எரிந்தது. மற்ற நாட்களாயிருந்திருந்தால் சட்டென மனம் கடிகாரத்தை தேடியிருக்கும், கொதி நீராய் கொதித்திருக்கும். விழிகள் விட்டத்திலேயே இன்னும் லயித்திருந்தது.
நான் செய்வது சரிதானா? நேற்றைய இரயில் நிலைய நினைவுகள் மனதுக்குள் நிற்க்க ஸ்டெசன் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தது.
அது எப்படி தவறாகும்? என்னைப் போன்றவர்கள் செய்தால்தான் தவறா?
 இந்த சமூகத்தில் இருக்கும் எல்லா பெரிய மனிதர்களும் அனேகமாக பன்னுகிறார்கள். அவங்க பன்னுனா தப்பில்லையா?
ஏன்னா பணம் இருக்கே. எங்கிட்ட இல்ல.
அதேப்படி பணம் இருந்த எல்லாம் சரியாகும்?
சட்டென பல துண்டுகளாய் சிதறிய அந்த பெண்ணின் உடல் ஞாபகத்திற்க்கு வந்தது. கோர உடலை நினைத்ததும், இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அடிபட்டது அந்த பெண்ணாயில்லாமல் நானாயிருந்திருந்தால். நினைக்கவே ஏதோ போல இருந்தது. என் தலை முடிகள், கை மற்றும் கால் முடிகள் நடனமாடிக் கொண்டிருந்தது பயத்தால். ஆனால் ஏதோ அசட்டுத் தைரியம் “நான் சாகமாண்டன்” அடிமனத்திலிருந்து வந்தது. சாகும் வரை எல்லா மனிதர்களும் தன்னை பூமியில் சாகா வரம் கொண்டவர்களாகவே நினைக்கிறார்கள்.
என்னைச் சுற்றிக் கொண்டிருந்த போர்வையை கஷ்டப்பட்டு விலக்கினேன். நைட் சிப்ட் பார்க்கத் தொடங்கிய மின்விசிறி இன்னும் ஒவர் டைம் பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் எல்லா சன்னல்களும், கதவும் யாரையும் வரவேற்க்க தயாராக இல்லை. இருட்டை கடத்தி என் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தேன். எப்படியோ மோப்பம் பிடித்த ஒளி சன்னல்களின் வழி ஊடுறுவ முயன்றது. சில நொடிகளுக்கொல்லாம் ஒளியும், இருளும் கலந்த ஒரு குழப்பநிலை நீடிக்கத் தொடங்கியது.


கஷ்டப்பட்டு சம்பாருச்சு, கார் வாங்கி, வீடு கட்டி எப்படியும் கடைசில சாகத்தானவேனும். நா ஏ இவ்வளவு கஷ்டப்படனும்? தலையனையை சுவற்றில் சாய்த்து வைத்து, பெட்டிலிருந்து எழுந்து அதன் மேல் சாய்ந்தேன். வீட்டை விட்டு வெளியே போகவும் மனமின்றி, பெட்டிலே படுக்கவும் மனமின்றி சாய்ந்து படுத்திருந்தேன்.
என் மனம் ஒரு கவலைசுரபி. கங்கையே வற்றினாலும், வற்ற வாய்ப்பில்லை.நா யாரையாச்சும் கொன்னா அது கொலைக்குற்றம், அதுவே இராணுவத்தில் பண்ணிணா தங்கப்பதக்கம். அப்ப இராணுவத்தில இருக்கிறவங்க எல்லாருக்கும் சொர்க்கத்தில இடமில்லை போலும். வெளிநாட்டுக்காரனேல்லாம் பதினெட்டு வயசுல உறவு வச்சுக்கிறான் அது தப்பில்ல, ஆனா நா வச்சுக்கிட்டா தப்பு. எல்லாரும் மனுசங்க தான?
தலையனை சுவற்றிலிருந்து மெதுவாக நழுவத் தொடங்கியது. கொஞ்சமாய் கொஞ்சமாய் அறைக்குள் வெளிச்சம் அதிகரித்தது. ரொம்ப நேரம் இருளை மறைத்து வைக்க முடியாது போல தோன்றிற்று.
அடுத்து என்ன பன்னலாம் என்று மனம் தீவிரமாக யோசித்தது. டீவி பார்க்கலாம், ம்ம்.... வேண்டாம் வேண்டாம் திருப்பவும் தூங்கலாம்..ம்கூம்... பல் விளக்கலாம்.
டிவிடி ரிமோட்டை எடுத்து மனதுக்கு பிடித்த பாட்டை போட்டேன். வால்யும் பட்டனை விடாமல் தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் ரிமோட்டின் வால்யும் பட்டன் மட்டும் அழுத்தப்பட்டது ஆனால் வால்யும் அதிகரிக்கவில்லை. பாடல் அதிரத் தொடங்கியது. தலையனை முழுவதும் பெட்டில் நழுவியிருந்தது. ரிமோட் சுமையாக தெரிந்ததால், கைகள் அதற்க்கு விடுதலை தந்தது. வாய் பாடலை தானாக முனுமுனுத்தது. இந்த வேளையில் நான், ரிமோட், தலையனை மற்றும் சில அழுக்கு துணிகளும் பெட்டில் படுத்திரிந்தோம்.
 பாடல் முடிந்த அடுத்த நொடி, கைகள் திருப்பவும் அதே பாடலை பாடச் செய்தது. பத்தவாது முறை அந்தப் பாடல் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தது. கைகள் பாடல் முடிந்ததும் அதே பாடலில் இருப்பதை உறுதி செய்தது. முதல் முறை கேட்ட அதே சந்தோசம், அதே துள்ளல் இப்போது இல்லை. பாடல் பாடிக்கொண்டிருந்தது. இருபதாவது தடவை..... என்னடா பாட்டு இது. மனம் எரிச்சலுற்றது. தேனாய் இனித்த அந்தப் பாடல் இப்போது தீயாய் எறிகிறதே!  சற்று பொறுத்துப் பார்த்தேன். என்னால் இறைச்சலைத் தவிர வேறேதையும் கேட்க்க முடியவில்லை. என்னை அறியாமலே அந்தப் பாடலை நிறுத்திவிட்டேன். சட்டென நிசப்தம் வாடகைக்கு குடியேறிவிட்டது. ரிமோட்டை பக்கவாட்டில் ஆட்டியவாறே மின்விசிரியை பார்த்தேன். அதேப்படி தேனான பாடல், கொஞ்ச நேரத்தில் காதில் குத்தலெடுத்தது? ச்சே என்னடா வாழ்க்கை? மனம், குழப்பம் என்னும் ஊஞ்சலில் வேகமாக ஆடத்தொடங்கியது. தலை சுற்றுவதைப் போல உணர்ந்தேன். மீண்டும் இருள் படர்வதும், ஒளி விலகுவதும் மனதில் நிகழ்ந்தது

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ