Skip to main content

வழிவழி ஓடி

இரவும் பகலும் ஒன்றோடு ஒன்று குலவிக்கொண்டிருந்தது. சர்ச்சின் கடிகாரத்தில் உள்ள பெரிய முள் மணி பன்னிரண்டை தாண்ட முயன்றது ஆனால் சின்ன முள் என்னவோ ஆறில் சாவுகாசமாக அமர்ந்திருந்தது. நேற்றுப் பெய்த மழையில் வீதியெல்லாம் சிறு சிறு குட்டைகளாய் மாறியிருந்தது. நான் அவற்றைத் தாண்டியும், வளைந்தும் போகவேண்டியிருந்தது. ஸ்தோத்திர பாடல்கள் காதில் வந்து நிறைந்தது. எனக்கு முன்னே அவள் நடந்து கொண்டிருந்தாள், சில அடிகள் இடைவெளியிருக்கும்.
என்ன வடிவானவள் அவள். நடக்கும் போது ஒருவித நளினம், கூந்தல் ஆடும் நடனம், ஒருவித களிப்பை எனக்கு ஊட்டியது.
யேய்..கொஞ்சம் நில்லு என்று சற்று உரத்த குரலில் கத்தினேன்.
தலையை திரும்பிப் பார்த்தாள். ஒரு போகம் சோகத்தை அறுவடை செய்ய போதுமான இரண்டு டிஎம்சி கண்ணீரை திறந்துவிட்டாள். மனம் பனிமூட்டத்தில் மாட்டிக்கொண்டது போலவும், கடலின் அடிஅழத்தில் சிக்கி வழிதெரியாமல் தவிப்பது போலவும், திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போலவும், எதிலோமாட்டிக்கொண்டது போலவும் தவித்தது. துன்பம், பயம், கவலையால் கலந்த முகம் போல அவளது முக பாவனை எனக்குத் தோன்றியது. திடுமென அது கடுமையானதாய் மாறிப்போனது, உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.  முன்னை விட அவளது நடையின் வேகம் கூடியிருந்தது. கிட்டத்தட்ட நான் அவள் பின்னால் ஓடுவதுபோல் இருந்தது.
இவ்வளவு சின்ன விசயம். சே..எப்படி இவ்வளவு பெரிதாக மாறி என்னைச் சித்தரவதை பண்ணுகிறது? அதற்க்குள் நான் சர்ச்சின் கதவுகளை கடந்து, அண்ணாச்சி பூக்கடையை நெருங்கி இருந்தேன். அவளோ முருகம்மா பாத்திரக்கடையை தாண்டிவிட்டிருந்தாள். பார்ப்பவர்களுக்கு நாங்கள் இருவரும் ஜாக்கிங் போவதுபோல தோன்றக்கூடும்.
என்ன ஒரு கவர்ச்சி அவள் நடையில். அவளைப் பார்த்தால் நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்பமாண்டார்கள். ஏன் போன வருசம் அவளைக் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று ஒருவன் வந்து நின்றான். ஒருவழியாய் நான் பேசி அவனை அனுப்பி வைத்தேன். அவனோ பத்து மாசமாய் அவளை மனதுக்குள் காதலிப்பதாய் சொல்லி வருந்திக்கொண்டே சென்றான்.
இன்னேரத்துக்கு நான் குளித்து ஆபிஸக்கு ரெடியாகி இருப்பேன். என் குழந்தையோ ஸ்கூலுக்கு ரெடியாகி இருக்கும். நான் இங்கே அவள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் தலையெழுத்து.
ஸ்டேல்லா நிக்கப் போறயா இல்லையா?

காதில் எதுவும் வாங்காமல் அவள் நடப்பதிலே குறியாக இருந்தாள். ஆம் அவள் பெயர் ஸ்டல்லா கார்த்திக். பெயரே போதுமே எல்லாவற்றையும் சொல்ல. அவள் மலையாளி கிறிஸ்டியன், நான் இந்து. நிச்சயம் பண்ண கல்யாணம்தான் நடக்கும்னு எதிர்ப்பாக்கிறது வேடிக்கைதான்.
தினம், தினம் பனிப்போர், போர் அப்புறம் அக்கப்போர். அம்மாவுக்கு ரொம்ப ஆச்சாரமா இருக்கனும். இப்படித்தா டிரஸ் போடனும், இப்படித்தா நடக்கனும். ஆனா ஸ்டெல்லாவுக்கோ, தான் மாடனான பொண்ணு, அவளை யாரும் கட்டிப்போட முடியாதுங்கிற ஒரு எண்ணம். சுருங்கச் சொன்னா, ஸ்டெல்லாவுக்கு எங்க அம்மா ஒரு பழமைவாதி, கொடுமையான மாமியார், காட்டுமிராண்டி, இன்னும் எல்லா கெட்ட வார்த்தையும். எங்க அம்மாவுக்கோ, அவளோரு அடங்காப்பிடாரி, குடும்ப மானத்தைக் கெடுக்கறவ.
கல்யாணம் பண்ணிண கொஞ்ச நாள், அப்படினா பத்து நாள். சுமூகமாகதான் போனது. பின்குறிப்பு:அந்த பத்து நாள் நாங்க ஹானிமூனுக்கு ஊட்டி போய்விட்டோம். ஒரு சேலையை எங்க அம்மா வாங்கி வச்சிருந்தா. ஆனா அப்போ கடைக்காரான் இலவசம்மா பிரச்சனையும் குடுத்திருக்கான்னு தெரியாது. 
எங்க மாமா விருந்து கொடுக்கிறன், வீட்டுக்கு தவறாம நாளைக்கு வந்தடறனும்னு சொல்லிட்டு போனாறு. அவர் அம்மா வழி மாமா. அம்மா புதுச்சேலையைத்தான் கட்டிக்கிட்டு போகனும்னு சொன்னாங்க, அவ என்னடானா சிலிவ்வெஸ் தா போடனும்னா. ஆரம்பம் ஆனது குருசேத்திரப்போர். அதோட உச்சகட்டமா அந்த இளைஞன் ஸ்டெல்லாவுக்கு புரபொஸ்பண்ணின விசயம் பெரிய பிரச்சனையானது.
தாலி, காலுல மெட்டி இதெல்லாம் போட்ட இந்த பிரச்சனை வருமா? எங்க அம்மா ஸ்டெல்லாவக் கேட்டாள்.
அது எல்லாம் போடமுடியாது, நீங்க ஒரு காட்டுமிராண்டி. என்ன எப்ப பார்த்தாலும் இப்படித்தா இருக்கனும்,அப்படித்தா இருக்கணும்னு டார்ச்சார் செய்யறிங்க என்று கத்தினாள் ஸ்டெல்லா.
பொதுவாக நான் யாரோ ஒருவரை சமாதானம் செய்வது வழக்கம் ஆனால் இன்று என் நிலைமை படு மோசம்.
உன்ன பத்து மாசம் பெத்து வளத்தனுதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
கார்த்திக் நான் லவ் பண்ணும் போதே சொன்னேன் இல்ல. என்னால சாதாரண பொண்ணுமாதிரி எல்லாம் இருக்க முடியாதுனு. வாட் நான் சென்ஸ் இஸ் திஸ்? ஐயம் கோங் கோம் என்று மூட்டை முடிச்சை எல்லாம் கட்டத்தொடங்கினாள்.
அப்பப்பா! நான் தவித்த தவிப்பு இருக்கே அந்த கடவுளுக்குதான் வெளிச்சம். ஒருவழியாய் அப்பாதான் காப்பாற்றினார்.
சந்திலிருந்து வண்டி கீரிச்….என்று பிரேக் போட்டு நின்றது. பைக்கில் வந்த ஆசாமி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, லாவகமாக வண்டியைத் திருப்பிவாறு, மனதில் என்னைத் திட்டிவிட்டு சென்றான். அதற்க்குள் ஸ்டெல்லா கம்பன் தெருவைக் கடந்து பிரதான இரமர் தெருவை எட்டியிருந்தாள்.
 சூரியன் சற்று எட்டிப்பார்க்க எத்தனித்திருந்தான். வானம் வெள்ளை வெளேர் என்ற மேகப்பூவை பூத்திருந்தது. பிளைட் ஒன்று பூவிக்குள் சென்று தேனேடுக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல மேகத்துக்கு மேலும் கீழும் சென்றது.
பிளிஸ் நில்லு என்று கத்தியவாறு ஓடினேன்.
வேலைக்கு போன புதிதில், சுவாரசியமில்லாமல் போய்க்கொண்டிருந்து. அப்போதுதான் கவனித்தேன் ஒரு பெண் வருவதும், போவதுமாய் இருப்பதை. என்னைப் பார்ப்பாள், நான் பார்த்தாள் திரும்பிக்கொள்வாள். ரொம்ப நாள் பார்வையிலே போய்க்கொண்டிருந்தது. எனக்கு அவளை பிடித்துப்போக, மனதில்  காதல் முளைவிட்டது போல தோன்றிற்று.
திடுமென ஒருநாள் அவள் எங்க ஆபிஸ்க்கே வந்துட்டா. என்னடா இது? போய் பேசிட வேண்டியதுதான்னு. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போனேன்.
வதனமான நெற்றி, மயக்கும் பார்வை, எழிலான கன்னம், சிறுநகை பூத்த இதழ் இதயத்தை கிழிக்கும் கூரான கூந்தல் .
நா குழரியது.
சட்டென அவள் நீங்க லவ் புரபோஸ் பண்றப்படியிருந்தா. ஐயம் சாரி நா ஆல்ரெடி கமிடேட் என்று சொல்லிவிட்டாள். மனம் பதைபதைத்தது. வியர்வை ஆறானது. என்ன செய்வதேன்றே புரியவில்லை. பின்னால் ஒரே சிரிப்புச் சத்தம், எனக்கோ ரொம்ப கேவலமாக இருந்தது. சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன்.
 நிறையப்பேர் இருக்கக்கூடாது கடவுளே என்று மனதுக்குள்ளே வேண்டினேன்.
வேண்டுதல் பழித்தது. ஆனால் அங்கு ஒரு பெண் நின்றிருந்தாள். பின்னாலில் அவள் பெயர்தான் ஸ்டெல்லா என்று தெரிந்துகொண்டேன்.
ஐயம் சாரி..என்று சொல்லி அந்த இடத்தை மட்டும் விட்டுச் சென்றாள்.  பிறகு அவளே வந்து பேசி அப்புறம் காதலில் விழுந்து, அழுது புலம்பி கல்யாணம் பண்ணி இப்போதும் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
அவளைக் கல்யாணம் செய்யும் போது, அம்மா முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாள். நான் நினைத்துக்கொண்டேன் இவ்வாறாக, கல்யாணம் ஆகி பிள்ளை குட்டி என்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று. ஆனால் இப்போது என்ன செய்வதேன்றே தெரியாமல் தவிக்கிறேன்.
அட! காப்பி சரியா போட மாண்டியானு அம்மா கேட்டாங்க. இதுக்கு மேல இந்த வீட்டுல இருக்க முடியாது கார்த்திக்னு அவளேட கடைசி ஆயுதம், பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்தினாள். வீட்டுக்கு போறேன் கார்த்திக்.
இதோ போறாளே!!
ஒருவழியாய் அவள் நின்றிருந்த பஸ்ஸ்டாப்புக்கு, சில நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தேன்.
இது எல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்கு போய் யாராவது கோபிச்சிகிட்டு போவாங்களா என்றேன்.
நான் சொல்லுவதை கேட்காதது போல, பஸ் வருவதை எட்டிப் பார்த்தாள்.
சாரி மா என்றேன்.
கைகளை கட்டிக்கொண்டு, தன் முகத்தை அவள் தோள்பட்டையில் தேய்த்தாள். பதிலில்லை.
நா என்னதா பண்ணாணும்?
புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தாள். ஏன்? உனக்கு தெரியாதா என்னனு என்பது போல இருந்தது அவள் பார்வை.
சற்று நேரம் நான் பேசினேன், நான் மட்டும் பேசினேன். சில சமயம் அவள் அபினயம் காட்டுவாள். சில சமயம் எந்தவித உணர்ச்சியும் இராது.
ஆட்டோவை நிறுத்தினாள். தாம்பரம் எவ்வளவு பா? என்றாள்.
நூறுவா மா என்றான் அவன்.
என்னது நூறு ரூபாயா? உனக்கே ஓவரா தெரியல என்றாள் கிண்டலாக.
இதோ பாருமா! பேன்ச மழைல, ஏரி குளமேல்லாம் உடைஞ்சு போச்சு, சேலையூரில ரோட்டையே காணோம். பஸ், கிஸ் எல்லாம் வாராது.
கிஸ் என்ற வார்த்தையை அவன் உச்சரிக்கும் போது சற்று முன்னால் நகர்ந்து அவள் அருகே வந்தேன். அவள் முறைத்தாள்.
நான் தா ரிஸ்க்கெடுத்து வந்தேன் என்று தன் தரப்பு நியாத்தை வைத்தான் ஆட்டொ.
அத்தனை பிரச்சனையிலும் காசு அதிகம்பா, ஓவர், வேண்டாம் என்று ஆட்டொவைப் பார்த்தும், என்னைப் பார்த்தும் சொன்னாள்.
பஸ் வரும் திசையை பார்த்து நின்றிருந்தாள். ஆட்டொக்காரனும் அங்கேயே நின்றிருந்தான்.
என்னது ஆதித்யா கிழ விழுந்து, தலை பூரா இரத்தம் வருதா? என்றேன் போனைக் காதில் வைத்தவாறு. முகம் முழுவதும் வருத்த ரேகை ஓடியது.
சட்டென தவிப்பாய் என்னைப் பார்த்தாள், என்னிடம் எதுவும் பேசக்கூடாது என்ற தீர்மானத்தால் வீட்டுக்கு ஓடத்தொடங்கினாள்.
மெதுவாகவே போகலாம். எப்படியும் இவள் பின்னால் ஓடமுடியாது என்றேண்ணிக்கொண்டேன்.
ஆட்டொ முகம் பிரகாசமானது என் கைகளில் இருந்து இருநூறு ரூபாய் நோட்டை வாங்கும்போது.
சார் யாரு அந்த ஆதித்தியா? என்றான் ஆட்டொக்காரன் பணத்தை வாங்கிக்கொண்டவாறு.
எங்களோட பையன் என்றேன் அலட்சியமாக.
என்ன சார் உங்க பையன்னு சொல்றீங்க. தலையெல்லாம் இரத்தம் வழியுது? இப்படி சாதரணமா இருக்கீங்களே சார் என்றான்.

ஏ? உனக்கு மட்டும் தா பொய் சொல்லத் தெரியுமா?

Comments

  1. வாட் நான் சென்ஸ் இஸ் திஸ்? இந்த கதை அனைத்து ஆண்களும் சொந்தம்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ