Skip to main content

Posts

Showing posts from 2016

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

நான் என்ன செய்யட்டும்?

பஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது.  அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு  தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற  இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டம

அவள் வருகைக்கு நன்றி

என்னுள்ளே இரவுகள் விடிவின்றி தவித்தது. முழுநிலவு வருமென்று நினைத்தது பகடியானது. வெண்மையும், நீலமுமாய் சேலை அணிந்து கொள்ளும் வானமொரு வஞ்சகன், கயவன். எப்போதும் நிலவை தான் மட்டும் சொந்தம் கொண்டாட வேண்டுமென்கிறான். கட்டுப்பாடுகள் சுக்குநூறானது. சந்தனத்தை பாலில் உறைத்த வெண்மை என் மனதில் நிகழ்கிறது. அய்யோ! பொங்கிவிடுமோ? வானம் பொறமைப்படுகிறது. படட்டும், எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும். உச்சத்தில் மனம் தன்னை மறந்து ஆனந்தத்தில் கூத்தாடுகிறது. நொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயம். இல்லை இல்லை. அது உண்மை. மந்திரத்திலேல்லாம் நம்பிக்கையில்லை. ஒருவேளை அதனால் நடந்திருக்கும், நிகழாமலூம் போயிருக்கும். அவள் வருகைக்கு நன்றி.

இரண்டு பேரிச்சம்பழம்

எல்லோரும் நகைக்கிறார்கள். என் கையில் இரண்டு பேரிச்சம்பழம் இருக்கிறதாம். அதை திருப்பக்கொடுத்தால், லட்சியத்தை மீட்டுவிடலாமா?

நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன். ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன். பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை. நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன். ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன். பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை. நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

கடவுள்

எக்காலத்தும் விளங்காத கேள்வி இது கடவுள் இருக்காரா? ஆமாம். கிணத்து மேட்டில் கிடக்கிறார். வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்களாம்.

வெண்தோடு

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருமண்தான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்க

சிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்

தேதி: 05.06.2016 நாள்: ஞாயிறு இடம்: கேம்ப் ரோடு. நிகழ்ச்சி நிரல் பகுதி 1: அறிமுகம் அ.கதை சொல்லுவது ஏன் முக்கியம்? ஆ.இலக்கியம் என்றால் என்ன? இ. மரபுக் கவிதை ஒரு விவாதம் ஈ. சிலப்பதிகாரம் ஓர் அறிமுகம். உ.விவாதம் பகுதி 2: புகார் காண்டம் பகுதி 3 :மதுரைக் காண்டம் பகுதி 4 : வஞ்சிக் காண்டம் பகுதி 5 : இறுதி விவாதம். நேரத்தை சரியாக வரையறுக்கமுடியவில்லை. அதிகபட்சமாக 5 மணி நேரம்.

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன். கதை: சிலப்பதிகாரம்.                                இடம்: சென்னை நாள்: இன்னும்  முடிவாகவில்லை. பின்குறிப்பு:   சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன். பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம். ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது? கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை. சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது. அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது? எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்

திரி

திரி கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தால், வண்ண ஓவியங்களாய் மலர்வாள் ஆனால் வெடிச்சத்தம் மட்டும் உள்ளேதான். வெடிக்காவிடில், எப்படியும் கொஞ்ச நேரத்தில் நடக்கும். காதல் திரி கொழுத்தப்பட்ட பட்டாசு.

கம்பராமயாணம் - இருவினை வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,    மருதத்தை முல்லை ஆக்கி, புல்லிய நெய்தல்தன்னைப் பெரு    அரு மருதம் ஆக்கி, எல்லையில் பொருள்கள் எல்லாம்    இடை தடுமாறும் நீரால், செல்லுறு கதியின் செல்லும்வினை    என, சென்றது அன்றே . முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கியும்;    மருத நிலத்தை முல்லை  நிலமாகச்   செய்தும்; புன்புலமாகிய நெய்தல்  நிலத்தை;   நிகரில்லாத மருத  நிலமாகச்  செய்தும்;   (பல்வேறு நிலங்களின்)  அளவற்ற   பண்டங்களை  யெல்லாம்;   தத்தம் இடத்தை விட்டு  வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும் தன்மையால்;   செலுத்தப்படுகின்ற போக்கிலே   இழுத்துப்  போகின்ற;   இரு வினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது. பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும்.  நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, மு

கம்பராமயாணம் -மழைத் தாரையின் தோற்றம்

. புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான், வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள், உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின், வழங்கின - மேகமே. புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான். இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும்.

கம்பராமாயணம் -விலை மகளிர் : வெள்ளம்

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன் நிலை நிலாது, இறை நின்றது போலவே, மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.   விளக்கம் : விலை    மாதர்     காமுகரது பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து, கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும் மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும் மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு. கம்பனை புரிந்து கொள்ள சில முயற்சியை முன் வைக்கிறேன்.  இந்த கவிதையை படித்த எல்லோருக்கும் வரும் சந்தேகம், எப்படி மலையில் ஓடும் வெள்ளத்தை விலை மாதரோடு ஒப்பிடலாம்? வெள்ளம் என்பது புனிதமானது, உயிர்களை செனிக்க வைக்கிறது. ஏன் நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் தோன்றி, வளர்ந்தது. அப்படியிருக்க இது தவறான ஒப்பிடா?  எப்போதுமே ஒரு ஒப்பீடுக்கு சென்றால் அதன் காலகட்டத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவறான சித்திரம்தான் கிட்டும். நம் கணக்குப்படி வெள்ளம் என்பது வளத்தை குறிக்கிறது. அதே போல் காமம் என்பதும் வளத்தை ச

கற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

ஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.  நண்பர்களே! என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குர

பூங்காவனம்

நா பார்க்குக்கு போய்டுவர்ர .. பதிலை எதிர்பாராமல் நிதானமாக நடக்க தொடங்கினேன் . கையிலி கட்டி பழக்கப்பட்டு இப்போது வெள்ளை வேட்டி கட்ட சிரமமாக இருக்கிறது . முக்கியமாக மடித்துக் கட்டினால் ஒருவேளை மானம் போகுமோ என்று பயந்து தூக்கிபிடித்துக்கொண்டே நடந்தேன் . பூங்கா .. மனதுக்குள் அந்த சொல் சட்டென முளைத்தது . ஏ வந்துச்சு அந்த சொல்லு ? தெரியல . பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா ? வாழையிலை கண்ணில் பட்டு சட்டென சுயநினைவுக்கு வந்தேன் . பிரபலங்களை பார்க்க மக்கள் வழி நெடுகிலும் முண்டியடுத்து எட்டி விழுந்து பார்ப்பதைப் போல மரங்கள் அந்த சாலையின் இருமறுகிலும் கம்பி வேலியைத்தாண்டி வெளியே எட்டிப் பார்த்தது . கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ராஜாவாய் அவற்றைப் பார்த்த வண்ணம் சென்றேன் . கொய்யா மரம் நல்லா வளந்திருக்கு ஆனா மாங்கா மரத்துல சரியா பிஞ்சு பிடிக்கல . இளனிக்கடைக்காரார் அழுக்கு கையிலி வேட்டியோடு பார்க் வாசலில் வந்து நின்றிருந்தார் . காலையில வாங்கியதற்க்காக லேசான புன்னகையை வெட்டினார் . பூங்கா பிறந்த தேதி , யாரு திறந்து வைச்சாங்க எல்லாத்தையும் சுவத்தில எழுதிவச்சிருந்தாங்க , ஏனோ அதைப் பார்க்க

அத்துவான வெளியில் தொங்கும் தமிழன்

கலாசாராம், பண்பாடு, மொழி, என் கல்வி இவைகள் எல்லாம் எதற்க்கு? ஏன் இது இல்லை என்றால் என்ன? நாம் ஏன் அமெரிக்ககாரனை போலும், ஜெர்மன்காரனை போலும் வாழக்கூடாது? இதைப் பற்றி நான் யோசிக்கும் பொழுது எனக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது. இது ஒரு ஜென் கதை. மிகவும் வயதான தாத்தா ஒருவர் ஜென் குருவை பார்க்க வந்திருந்தார். அவருக்கு பார்வையில்லை. ஜென் குருவுடன் பேசிமுடித்ததும், தான் கிளம்பவேண்டும் என்றார். அன்று அம்மாவாசை. கும்மிருட்டு. நேராமாகிவிட்டது, இன்று வேண்டும் நாளை காலை போகலாமே என்றார் குரு. இல்லை உடனே போயாகவேண்டும் என்றார் தாத்தா. சரி இந்த விளக்கை கையிலேடுதுக்கொண்டு கிளம்புங்கள் என்று குரு சொன்னதற்க்கு, எனக்கோ கண் தெரியாது இந்த விளக்கை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்றார். உங்களுக்கு வேண்டுமானால் கண் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எதிரிலே வருபவர்களுக்கு தெரியுமல்லாவா என்றதும், தாத்தா விளக்கை வாங்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார். கொஞ்ச தூரம் கடந்து வந்ததும், யாரோ ஒருவர் அந்த தாத்தா மேல் மோதிவிட்டார். ஏ உனக்கு கண் தெரியாதா? விளக்கு வச்சுட்