Skip to main content

அத்துவான வெளியில் தொங்கும் தமிழன்

கலாசாராம், பண்பாடு, மொழி, என் கல்வி இவைகள் எல்லாம் எதற்க்கு? ஏன் இது இல்லை என்றால் என்ன? நாம் ஏன் அமெரிக்ககாரனை போலும், ஜெர்மன்காரனை போலும் வாழக்கூடாது? இதைப் பற்றி நான் யோசிக்கும் பொழுது எனக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது. இது ஒரு ஜென் கதை.
மிகவும் வயதான தாத்தா ஒருவர் ஜென் குருவை பார்க்க வந்திருந்தார். அவருக்கு பார்வையில்லை. ஜென் குருவுடன் பேசிமுடித்ததும், தான் கிளம்பவேண்டும் என்றார். அன்று அம்மாவாசை. கும்மிருட்டு.
நேராமாகிவிட்டது, இன்று வேண்டும் நாளை காலை போகலாமே என்றார் குரு.
இல்லை உடனே போயாகவேண்டும் என்றார் தாத்தா.
சரி இந்த விளக்கை கையிலேடுதுக்கொண்டு கிளம்புங்கள் என்று குரு சொன்னதற்க்கு, எனக்கோ கண் தெரியாது இந்த விளக்கை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.
உங்களுக்கு வேண்டுமானால் கண் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எதிரிலே வருபவர்களுக்கு தெரியுமல்லாவா என்றதும், தாத்தா விளக்கை வாங்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.
கொஞ்ச தூரம் கடந்து வந்ததும், யாரோ ஒருவர் அந்த தாத்தா மேல் மோதிவிட்டார்.
ஏ உனக்கு கண் தெரியாதா? விளக்கு வச்சுட்டுவந்தும் இப்படி மேல விழகிறயே? எரிச்சலோடு தாத்தா கேட்டார்.
அய்யா உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு என்றார் வந்தவர்.
அந்த விளக்குதான் நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்.  நமக்கே தெரியாமல் நமக்கு வழி காட்டிக்கொண்டிருக்கிறது. அது நம் வாழ்வுக்குள் ஒழிந்திருக்கிறது.
பெரும்பாலும் நம் மக்கள் மேலை நாட்டினரை போலவே வாழ ஆசைகொள்கிறோம். அவர்கள் வாழ்க்கை பாணி என்பது, ஐந்து நாட்க்கள் அயாராது உழைப்பார்கள், ஆறாவது நாள் சம்பாதித்தையேல்லாம் செலவு செய்வார்கள், ஏழாவது நாள் கடவுளிடம் மன்றாடிவிட்டு திரும்பவும் வார வாழ்க்கைச் சக்கரத்துக்குள் தொடர்வார்கள்.
 ஆனால் நம்மவர்கள் வாழ்க்கை முறையே வேறு. மகிழ்ச்சிக்கு ஒரு நாளும், துக்கத்திற்க்கு மறு நாளும் கிடையாது. மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதானே. நம்ம ஊரில் பண்டிகையில்லாத நாள் என்று ஒன்று உண்டா? நம்மில் பல பேருக்கு பொங்களை எப்படி கொண்டாடுவது, தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியாது, அதன் பின்னால் ஒரு வாழ்க்கைத் தொடர் சங்கிலி உள்ளது. நம் பாரம்பரிய கரகாட்டமும், ஒயிலாட்டமும் காணமல் போனது இதற்க்கான ஒரு நல்ல சான்று. சுருங்க சொல்ல வேண்டுமேன்றால் இலவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள் இது மாதிரி வேறேந்த சமூகத்திலும் கிடையாது, பிணத்தை தூக்கிகொண்டு சுடுகாடு போகும் போது போடும் ஆட்டமும் வேறேங்கும் இல்லை. அழுகையும் ஆட்டமும் கலந்ததுதான் வாழ்க்கை, ஒன்றை தனியாக பிரித்து மற்றோன்றை பார்க்க முடியாது. இதுதான் வாழ்க்கை தத்துவம், நம் பண்பாடு.
எனவே நம் சமூகம் நமக்கான பண்பாட்டை விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் கல்வி கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனை விட்டு விலகி போகிறோம். ஏன் விலகி போகிறோம்? நமக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு முழுமையான கல்வி அல்ல என்பதுதான் உண்மை. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல இது கல்வி இல்லை, ஒரு பயிற்ச்சி. எப்படி ஒரு தொழிற்ச்சாலையில் வேலை பார்ப்பது என்ற ஒரு பயிற்ச்சி அதைத் தாண்டி அதற்க்கு அர்த்தம் இல்லை. அதனால் தான் நம்மில் பல பேருக்கு எந்த ஆட்சி சரி தவறு என்று தெரியவில்லை. கடைசியில் வாக்களிக்காமல் வீட்டிலிருந்துகொண்டு தொலைக்காட்சி விமர்சனத்தையும் வேறு யாரோ சொன்னதையும் வைத்துக்கொண்டு முகநூலில் விமர்சனம் செய்வதும், பகிர்வதும் நம் வழக்கமாக ஆயிற்று. ஒரு மஞ்சுவிரட்டு வேண்டுமா? இல்லையா? என்று எவறும் தன் சுய அறிவிலிருந்து பேசுவதுயில்லை. அப்படி ஒன்று இங்கு குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். இந்த கலாச்சாரத்தை பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ செவிவழிமூலம் யாரோ ஒருவர் சொன்ன அறைகுறை தவறான தகவலுடன் அலைவதும் அதன் காரணமாக நம்மை நாமே தரைகுறைவாக எண்ணிக்கொள்வதும் தான் கற்றவர்கள்ளாகிய நாம் செய்வது. இருப்பதிலே மோசமான வேலை என்னவேன்றால் இதுதான். அப்படியேன்றால் இவ்வளவு பேர் படித்து என்ன பயன்? கல்வி என்பது ஒருவனை முழுமையாக்க வேண்டும். ஆனால் நமக்கு இருப்பது அறைகுறை அறிவு.
ஒருமுறை பட்டம்பெற்ற ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், “ ஏங்க தமிழ், தமிழ்னு கட்டிக்கிட்டு அழறீங்களே மொழிங்கறது ஒரு தொடர்புக்காக தானே. அது எந்த மொழியாயிருந்தா என்ன?
நான்கு எழுத்து கெட்ட வார்த்தை ஒன்றை ஆங்கிலத்தில் சொல்லி, இதை தமிழ்லில் சொல்லுங்க என்றேன்.  
அசடு வழிந்தார், அவர் வாய் அந்த வார்த்தையை சொல்ல கூசியது. உடனே சொன்னேன். பார்த்தீர்களா உங்களால் சொல்ல முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? என்றேன்.
அவர் என்ன என்பதைப் போல தலை அசைத்தார்.
நீங்கள் ஒரு பண்பட்ட, உயர்ந்த சமூகத்திலிருந்து வந்தவர் அதனால் தான் உங்களால் பொதுவெளிகளில் அந்த வார்த்தையை பேசமுடியவில்லை. தமிழில் யாரும் பொதுவெளில் அப்படி பேசிக்கொள்ளமாண்டார்கள். இப்போது தமிழ் மறைமுகமாக என் பண்பாட்டையல்லவா கூறுகிறது.
சிலர் சொல்வாற்கள்,  நான் பேசுவேனே? ஏன் குழாய் சண்டையில் பேசுகிறார்களே? ஆமாம் ஒத்துக்கொள்கிறேன். அதே போல் எப்போதும் சில விதிவிலக்குகள் இருக்கும் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள்.
அப்படியானால் இந்த பண்பாடு எதற்க்கு? நீ மேலை நாடுகளிலிருந்து வேறுபட்டவன், என்பதை இந்த கலாச்சாரமும், பண்பாடும் தான் சொல்கிறது. நீ எதுவும் புதிதாக சாதிக்க வேண்டுமென்றால் உன் சமூக கலாச்சாரம், பண்பாடு என்னும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்பாய் இருந்தால்தான் அது சாதனை ஆகும் இல்லை என்றால் அது மேலை நாட்டிக்காரன் கண்ட அதே கண்டுபிடிப்பாய்தான் இருக்கும்.  வேண்டுமென்றால் இப்ப்டிக்கொள்ளலாம், என்னதான் செய்தாலும் அவன் செய்து வைத்தவற்றில் செய்யும் மாறுதலாகவே இருக்குமே ஒழிய அது ஒரு மாற்றாக இருக்காது.  
 அவன் கண்டுடித்தது எல்லாம் அவனுடைய சமூகத்திற்க்கானது. ஆனால் நம் சமூகத்திற்க்கு என்று இன்னும் நாம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? நமக்குதான் நம் சமூகத்தைப் பற்றி எதுவுமே தெரியாதே. அதனால் தான் நாம் இன்னும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. அத்துவான வெளியில் நம் கால்கள் பண்பாடு என்ற தரையில்லாமல் மிதந்துகொண்டிருக்கிறோம். நாம் தமிழர்கள்.


Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ