Skip to main content

பூங்காவனம்


நா பார்க்குக்கு போய்டுவர்ர..பதிலை எதிர்பாராமல் நிதானமாக நடக்க தொடங்கினேன். கையிலி கட்டி பழக்கப்பட்டு இப்போது வெள்ளை வேட்டி கட்ட சிரமமாக இருக்கிறது. முக்கியமாக மடித்துக் கட்டினால் ஒருவேளை மானம் போகுமோ என்று பயந்து தூக்கிபிடித்துக்கொண்டே நடந்தேன். பூங்கா.. மனதுக்குள் அந்த சொல் சட்டென முளைத்தது. ஏ வந்துச்சு அந்த சொல்லு? தெரியல. பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா? வாழையிலை கண்ணில் பட்டு சட்டென சுயநினைவுக்கு வந்தேன். பிரபலங்களை பார்க்க மக்கள் வழி நெடுகிலும் முண்டியடுத்து எட்டி விழுந்து பார்ப்பதைப் போல மரங்கள் அந்த சாலையின் இருமறுகிலும் கம்பி வேலியைத்தாண்டி வெளியே எட்டிப் பார்த்தது. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ராஜாவாய் அவற்றைப் பார்த்த வண்ணம் சென்றேன். கொய்யா மரம் நல்லா வளந்திருக்கு ஆனா மாங்கா மரத்துல சரியா பிஞ்சு பிடிக்கல. இளனிக்கடைக்காரார் அழுக்கு கையிலி வேட்டியோடு பார்க் வாசலில் வந்து நின்றிருந்தார். காலையில வாங்கியதற்க்காக லேசான புன்னகையை வெட்டினார். பூங்கா பிறந்த தேதி, யாரு திறந்து வைச்சாங்க எல்லாத்தையும் சுவத்தில எழுதிவச்சிருந்தாங்க, ஏனோ அதைப் பார்க்கவே பிடிக்காது எனக்கு.
வா.. சுண்டல் வாங்கிட்டுப் போ. பார்க்குக்குள் நுழையும் போதே வரவேற்றால் சுண்டல்காரி. நாள் தவறாமல் வந்துவிடுகிறாள். பார்க் வாசலிலே உக்காந்துவிட்டு கடைசி வரை உள்ளே வராமலே போய்விடுவாள். மல்லிகைப் பூவை அவளது கைகள் மிகவேகமாக கட்டியது. கனகாம்பரம், சாதி மல்லி, ரோஜா என பூக்களை அடுக்கி வைதிருந்தாள்.
சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டேன் தலையை அசைப்பதன் மூலம். அவள் அடித்து வந்தவரிடம் அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அப்படியோன்றும் பெரிய பார்க்கெல்லாம் ஒன்றுமில்லை.  பார்க்கில் இருப்பவர்களை காவல் காப்பதற்க்காக நடப்பவர்களுக்கு என்று பார்க்கை சுற்றிலும் சிமென்ட் தரை. முதல் அரைப் பாதியில் புற்க்களும் மரங்களும் நன்கு வளந்திருக்கும். அதில் சிமென்ட் பென்ஞ் போட்டிருந்தார்கள் உட்க்கார. மொத்தமே ஆறுதான். மியுசிக்சேர் மாதிரிதா. இன்னைக்கு நான் லேட் அதனால் உட்க்கார இடங்கிடைக்கிறது சந்தேகம்தான். அடுத்த பாதில இடப்பக்கம் குழந்தைகள் விளையாட, வலப்பக்கம் பெரியவர்கள் விளையாட. நடுவுல தண்ணி நடனமாடும். அத பாக்கபோக, பார்க்கை சரி பாதியா சிமென்ட் ரோடு பிரிச்சு போட்டது.
சரி உட்க்கார இடம் தேடி இடப்பக்கம் சிமென்ட் ரோட்டில் நடக்கலானேன். சீராய் வெட்டப்பட்ட புல்வெளி மீது தண்ணீர் பைப் மழையை பொழிந்து கொண்டிருந்தது. புற்கள் வெட்கமே இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் குளித்தது பிறகு தலையில் நீர்க்குல்லாவை அணிந்து கொண்டன. நடைபாதையின் இருபுறமும் பூமி தேவியின் தலைமுடியாய் சிறுசிறு செடிகள் வளர்ந்து நின்றது. அவள் மயிர்கள் பச்சை நிறமானவை. எப்பொழுதெல்லாம் வெழுத்துவிடுகிறதோ அப்போதேல்லாம் மூப்படைகிறால் என்று அர்த்தம், சில மாதங்களில் திரும்பவும் இளைமையாகிறாள். ஆனால் நான் பார்த்தவரை இங்கு மட்டும்தான் அவளை மூப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் போல. அதனால்தான் இளமையோடும், அழகோடும் அவள் முடிகள் காட்சி தருகின்றன. நான் இரண்டடி வைப்பதற்க்குள் நாங்கைந்து பேர் கைகளை நன்கு வீசி கடந்துபோனார்கள் அதில் இரண்டு பேர் என்னை இடித்து போனவர்கள். அந்த மரத்தின் மலர்கள் தனிதனியே பூக்காதது என் கவனத்தை ஈர்த்தது. அரை வட்டத்திற்க்கு அதன் மலர்கள் நெருங்கிப் பூந்திருந்தது ஆனால் அதன் இலைகள் கிளைக்கு நாலு, ஐந்து என்றுதான் இருந்தது. இந்த மலர்கள் சிவனுக்கு உகந்தது என்று நானும், என் அம்மாவும் வாக்கிங் போன சமயத்தில் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். என்ன மரமுனு பெயர் தெரியவில்லை. நீலக் கலர் கட்டம் போட்ட  டீசர்ட் பெண் சம்மன்னங்கால் போட்டு அவளுடைய காதலனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி கீழே குனிந்து குனிந்து சிரித்தால். அவளது மார்பக குழி அகப்பட்டு பிறகு மறைந்தது.
உன்னைக் கடித்த கொசு என்னைக் கடித்த போதுதான் கண்டுகொண்டேன், கொசுக்களால் காதல் பரவாதேன்று.
அவன் கவிதை படிப்பது சன்னமாக கேட்டது. தொடர்ந்து சிரித்தாள். நான் அவர்கள் உட்க்காந்திருந்த சிமென்ட் பென்ஞ்சை கடந்துவிட்டதால் கவிதை கேட்க்க முடியாத நிலை. என் முன்னால் நடந்துபோனவர்கள் கால்களுக்கு சிக்காமல் அந்த மலர் விழுந்துகிடந்தது. கைகளில் எடுத்து முகர்ந்துபார்த்தேன். மணம் எங்கே இருக்கிறது மலரில்? இதழில், தண்டில்? சுற்றிப்பார்த்தேன். ம்கூம் அகப்படவில்லை.
அன்பும் அறனும்திருக்குறள் பார்க் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. சிமென்ட் பாதை நான்கு அடி வந்ததும் வலது பக்கம் திரும்பியது. திருக்குறளை படித்தவாறு குழந்தைகள் விளையாடும் பக்கத்திற்க்கு வந்து சேர்ந்தேன். சறுக்கு விளையாடுபவர்கள், தூரியாடுபவர்கள் என குழந்தைகள் குதுகுலமாகயிருந்தன. மீண்டும் சிமென்ட் ரோடு வலதுபக்கம் திரும்ப நான் ஒரு வழியாய் பெரியவர்களுக்கான இடத்திற்க்கு வந்தேன். இறகுப் பந்து கட்டியிருந்த வலைக்கு மேலே பறந்தது. எல்லோர் கவனமும் அந்த பந்தில்தான் லயித்திருந்தது. கனமான உடம்புள்ள பெண் குதித்து குதித்து பந்தை அடித்தாள். அதையும் கடந்து புல்வெளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். எதிர் பகுதியில் எல்லாம் காதலர்கள், நான் நிற்க்கும் பகுதியில் மட்டும் குடும்பமாக சிமென்ட் பென்ஞ் நிறைந்திருந்தது. நடுவில் சிமென்ட் ரோடு. எப்படியோ இந்த பிரிவினை இயல்பாகவே வந்துவிட்டது. அவரவர் எல்லைக்குள்தான் உட்க்காருகிறார்கள். என்னைப் போன்ற கிழத்துக்கு என்று இடமில்லை ஆனால் நான் குடும்ப பகுதியில்தான் உட்க்கார முயலுவேன். இன்று வழியின்றி தேங்கித் தேங்கி நடந்தேன். டொம்.. என சத்தம் அதைத் தொடந்து குழந்தையின் அழு குரல். ஒரு பலுன் வெடித்திருந்த்து, மற்றொரு பலுன் பார்க்கின் புல்வெளியில் உருண்டொடியது. அப்பா அதை தூரத்தினார். மற்றொரு வெடிச்சத்தம். குழந்தையை சமாதானப்படுத்தாமாண்டாமல் அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திவிட்டென்.
அந்த அழகான மாலை வேளையில் அழுக்கடைந்த பென்சின் மேல் அமர்ந்திருந்தேன். ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. சர்ச் பார்க்குக்கு பின்புறம் ஒட்டினார் போல நின்றிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்.துதிப்பாடல்கள் அழுத்தமான குரலால் பார்க் முழுவதும் பரவியிருந்தது. பிச்சைக்காரர்கள் சர்ச்சின் வாசலில் வரிசையாக நீண்டிருந்தனர். அவரின் வரவேற்ப்பை ஏற்றார்களா என்று தெரியவில்லை. எப்போதும் போல சர்ச்சின் வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் உள்ளே போகவும் இல்லை வெளியே வரவும் இல்லை காற்றைத் தவிர. அது மட்டும் உள்ளே, வெளியே என்று விளையாடிக்கொண்டிருந்தது.
விசில் சத்தம் எல்லோர் கவனத்தையும்  ஒரு கை வாட்ச்மேன் மேல் குவித்தது. அவன் விசிலை ஊதிக்கொண்டே எனக்கு எதிர் திசைக்கு வேகமாக நடந்தான். அந்த டீசர்ட்காரியும் அவள் காதலனும் புல்வெளியில் செல்பி எடுக்க தங்களது முகங்களை ஒன்று சேர்த்து, பற்க்களை கொஞ்சம் காட்டி, கேமராவில் பதிவு செய்ய முயன்றனர். அதற்க்குள் வாட்ச்மேன் அவர்களை வெளியே வரச் சொல்லி சத்தமிட்டான். அவர்கள் அதற்க்கு மேலும் அங்கே இருக்க விரும்பாமல் வெளியேறினர். ஒரு குழந்தை இன்னும் தூரியாட வேண்டுமென அடம்பிடித்தது, மற்றவற்களும் ஆடவேண்டும் என சாமதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பா ஒருவர் தன் மகளோடு தூரியில் ஆடினார். தன் கை சைகை மூலம் அது குழந்தைகளுக்கானது எழு என்று அவர் எழும் வரை ஊதித்தள்ளினான். எப்போதும் காக்கி கலர் சீருடையில்தான் வலம்வருவான் அவன். சிவப்பு நிற விசில் அது, எப்போதும் அவன் கழுத்திலே தொங்கும். விசில் சத்தம் தொடர்ந்து எழும்பிக்கொண்டேயிருந்தது.
பார்க்கில் நின்றிருந்த எந்த மரத்திலும் பூவுமில்லை, காயுமில்லை. இவைகள் மண்ணின் மரங்கள் இல்லையோ? என்று தோன்றியது. பச்சை பசேலேன்று வளர்ந்திருக்கிறது, தண்ணீருக்கு பஞ்சமில்லை. நம்ம ஊர் மரமாயிருந்தா விதை விழுந்து மரமா வளரும் ஆனா இந்த மரத்தை வாங்கித்தா வளர்க்கனும். மரம் வாங்கற காசு, வளர்க்கிற காசு எல்லாம் வீண். யாரு வளர்த்தா எங்க கிராமத்து வேப்ப மரத்த? வேப்பங்கா பொறுக்கி எவ்வளவு பண்ம் சேத்த நானு.
இதோ பாருங்க புல்லேல்லாம் காடுமாதிரி வளர்ந்து போச்சு. அதை வெட்டி போடுங்க முதல்ல, அப்புறமா அதோ பாரு வெளியேருந்து ஒரு மரம் பூவை உள்ள கொட்டுது. அதோட கிளையை உள்ள வராம வெட்டிப்போடுங்க.
இப்பவே ஆரம்புச்சிடலாமா? என்றான் கையில் கத்திரிக்கோல் வைத்திருந்தவன். இன்னும் இரண்டு பேர் அவன் பக்கத்திலே நின்றிருந்தனர். ஒருவன் கையில் புல்வெட்டும் மெஹின், மற்றவன் கையில் கத்தி.
ம்.. என்று சொல்லிக்கொண்டே விசில் ஊதியவாறு குழந்தைகள் பகுதிக்கு வேகமாக நடக்கலானான்.
ஒருவன் கத்திரிக்கோலால் சிமென்ட் ரோட்டின் இருபக்கமும் வளர்ந்திருந்த செடிகளை வெட்டத்தொடங்கினான். மற்றவர்கள் புல்மெஹினில் ஏதோ ரிப்பேர் வேலை பார்த்தனர்.
காற்றுக்கு வரிசையாக வைக்கப்பட்ட மரமும், செடியும் ஆடியது. சர்ச்சின் மணியோசை கேட்டது. மறுபடியும் விசில்சத்தம். பேரமைதி. எழுந்து கொண்டேன். அதற்க்குள் நான் இருந்த இடத்தை வேறு யாரோ பிடித்துவிட்டனர். மக்கள் உள்ளேயும் வெளியேயும் வேகமாக போய்க்கொண்டேயிருந்தனர். மணியோசையின் அதிர்வு பின்தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.        

    

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.