Pages

Friday, April 15, 2016

கம்பராமயாணம் - இருவினை வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
   மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
   அரு மருதம் ஆக்கி,
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடை தடுமாறும் நீரால்,
செல்லுறு கதியின் செல்லும்வினை
   என, சென்றது அன்றே
.

முல்லை நிலத்தை குறிஞ்சி
நிலமாக்கியும்;  மருத நிலத்தை முல்லை நிலமாகச்   செய்தும்;புன்புலமாகிய
நெய்தல்  நிலத்தை; நிகரில்லாத மருத நிலமாகச்  செய்தும்; (பல்வேறு
நிலங்களின்)  அளவற்ற   பண்டங்களை  யெல்லாம்; தத்தம் இடத்தை விட்டு  வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும்
தன்மையால்; செலுத்தப்படுகின்ற
போக்கிலே   இழுத்துப்  போகின்ற; இருவினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது.

பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும். 

நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, முல்லையோ எந்த வித நிலத்தின் பொருளும் கடலைச் செறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது போல மனிதன் எல்லா வழிகளிலூம் ( பக்தி, ஞான இன்னும் வேறு மார்க்கங்களில்) கடவுளை அடையலாம். எல்லா விதமான வேற்றுமைகளும் ஏற்று கொள்ளப்படும். இங்குதான் இந்தியாவின் மையபுள்ளி ஆரம்பிக்கிறது. அதுதான் விடுதலை. இன்னும் கற்ப்பனையை விரித்தால் விளங்கும்.

Thursday, April 14, 2016

கம்பராமயாணம் -மழைத் தாரையின் தோற்றம்

.
புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின
-மேகமே.

புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான்.

இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும்.Wednesday, April 13, 2016

கம்பராமாயணம் -விலை மகளிர் : வெள்ளம்


தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
 
விளக்கம் :
விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து,
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.

கம்பனை புரிந்து கொள்ள சில முயற்சியை முன் வைக்கிறேன். 

இந்த கவிதையை படித்த எல்லோருக்கும் வரும் சந்தேகம், எப்படி மலையில் ஓடும் வெள்ளத்தை விலை மாதரோடு ஒப்பிடலாம்? வெள்ளம் என்பது புனிதமானது, உயிர்களை செனிக்க வைக்கிறது. ஏன் நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் தோன்றி, வளர்ந்தது. அப்படியிருக்க இது தவறான ஒப்பிடா? 
எப்போதுமே ஒரு ஒப்பீடுக்கு சென்றால் அதன் காலகட்டத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவறான சித்திரம்தான் கிட்டும். நம் கணக்குப்படி வெள்ளம் என்பது வளத்தை குறிக்கிறது. அதே போல் காமம் என்பதும் வளத்தை சுட்டும் ஒரு குறீயீடாக பயன்படுத்தப்பட்டது. உயிர்கள் செனிப்பதற்க்கான காரணமே அதுதான். அந்த காலத்தில் காமத்தை போற்றி  பாடினர், சிலை வடித்தனர். இதன் பொருட்டு கம்பன் விலை மகளிரையும், வெள்ளத்தையும் இணைத்து கவிதை படித்தான். 

சற்று உங்கள் சிந்தனைகளை வளரவிட்டு யோசிங்கள், ஏன் கோவிலில் நிர்வான சிலைகள் இருக்கிறதேன்பது விளங்கும்.