Pages

Monday, September 12, 2016

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?
 சில சமயம் அவளது நான்கு முடியை ஆட்டி என் மேல் மோத வைக்கும், அவள் விலக்கிவிடுவாள். சுற்றிக்கொண்டு போய் துப்பட்டாவை தூக்கி அடிக்கும், இழுத்துவிடுவாள். சட்டென ஓடிவிடும். எதிர்பாரத நேரத்தில் முடிகள் அனைத்தையும் வாரி என் மேல் வீசும். கருந்திரை இருவரது முகத்தையும் மூடிவிட்டது. பையாஸ்கோப்பில் புகைப்படத்தை சின்ன வயதில் பார்ப்பது போலயிருந்தது, சிகையினுடே அவளது முகம். வெட்க்கத்தில் விளைந்த புன்னகை அவளது இதழ்களில் பரவியது. மனதுக்குள்ளே அந்த புன்னகை அமர்ந்துகொண்டு, என் மனதை தொண்டி தொண்டி மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டு இருந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு மகிழ்ச்சி? என்னுள்ளே தூங்கிக்கிடந்திருக்குமோ? சிகையை இரு கரங்களால் வளைத்து அவள் தலையின் பின் சேர்தேன். காது மடலுக்குள் அந்த நான்கு முடியை சொறுகிவிடுவதில் அவளுக்கு என்ன சந்தோஹம் என்று தெரியவில்லை? கொஞ்ச நேரம் அவளது தலையை பிடித்துக்கொண்டு மயாஜாலம் காட்டும் கண்களின் இரகசியத்தை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். ம்கூம்….நிரபராதி போல அந்த கண்கள் நடித்தது. முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அது உண்மையில்லை. ஒவ்வொறு முறையும் ஆராய முயலும் போது, எனது இருப்பை மறந்து தொலைந்து போவேன். பிறகுதான் தொலைந்து போனதன் நினைவே வரும். நீதிமன்றத்தில் உண்மை தெரிந்த இருவர் எதிர் எதிர் கூண்டில் நிற்க்கும் போது, உண்மை வாதடப்படும். ஆராயப்படும். நான் நீதிபதி ஆகும் போதெல்லாம் உண்மை மறந்துபோகிறது. சாட்சிக் கூண்டுக்குள் வந்தால் தெரிகிறது. அசையும் கற்ப்பாறை அவள் தலைக்கு மேல் தெரிந்தது.
அங்க பாரு யானைக் கூட்டம், என்றேன்.
அவள் தலையை திருப்பி, மலைக்கு மேலே நின்ற கூட்டத்தை பார்த்தாள். சில யானை மரங்களை உடைத்துப் போட்டது. கைகளை நீட்டி ஆமாம்.ஆமாம் என்றாள்.
இருளேனும் கற்ப்பப்பை பூமியை தினந்தோறும் காலை வேளையில் செனிக்க வைக்கிறது. மலையிலிருந்து சூரியன் தற்க்கொலை செய்வது போல தோன்றிற்று. கற்ப்பப்பை மலையிலிருக்கும் ஒவ்வொரு மரமாய் விழுங்கிகொண்டு போனது. கடைசியாய் நாங்களிருந்த கெஸ்ட் கவுஸ்சும், திருப்பிப் பார்ப்பதற்க்குள் மலை முழுவதும் அதனுள். மிக விரைவாக இருட்டிவிட்டது.
கார்த்திக் என்று அழைத்துக்கொண்டே என் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.
காற்று என் மீது இருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ம்.. என்றேன். ஒரு வித சங்கிதமாய் அந்த இரவில் கேட்டது.
நா ரொம்ப சந்தோஹமா இருக்கேன் என்றாள்.
அவள் தோள் மேல் கை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிக்கும் போது இந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நானும் ரொம்ப சந்தோஹமாதா இருக்கேன் என்றேன் பதிலுக்கு.
நிலவு மெதுவாக ஊர்ந்துகொண்டு வந்தது. வானம் மேகத்தை போர்வையை போல அடிக்கடி இழுத்துப் போர்த்திக்கொண்டுவிட்டது. நல்ல குளிர ஆரம்பித்திருந்தது. இரவு பூச்சிகள் பாட தொடங்கியது.    
நாம இந்த உலகத்தை விட்டு எங்கோ வெகு தொலைவில் இருக்கறமாதிரியும், நீயும் நானும் மட்டும் தனியா இருக்கறமாதிரியும் தோணுது. என்னால சந்தோஹத்த தாங்கிக்க முடியல. அவள் கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் வழிந்தது.
திடுமென போன் பண்ணி, நாம எங்கோயவாது போலாம் என்றாள். சரி மாயாஜால் போலாம் என்றேன்.
இல்லைபா.. எங்கயாவது ஒரு மூனு நாள், நாலு நாள் போலாம். மனசு சரியில்லனா. சுந்தர்தா மேகமலைய பத்தி சொன்னான். வழியேல்லாம் மோசம். ஓருவழியா வந்து சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரிந்தது ஓட்டலே இல்லைனு. எப்படியோ இங்க இடம் கிடச்சுச்சு. ஆபிஸ்க்காக முன்னாடி சின்ன பில்டிங், அதுக்கு பின்னாடி இரண்டு மாடில கெஸ்ட் கவுஸ். நாங்க தங்கின ஒரு ரூம தவிர மீதியெல்லாம் காலியாத கிடந்துச்சு.
ஆற்றில் அடித்த பொருளைப் போல துப்பட்டாவை காற்று அடித்து தூக்கி தரையில் வீசியது. அவள் அதைப் பற்றி கவலை அற்றிருந்தாள்.
கைகளை வளைத்து அவள் கழுத்தை சுற்றிக்கொண்டேன். நான்கு முடியை இந்த முறை நான் விலக்கி, அவள் காதறுகே இரகசியம் சொன்னேன். நீ தேவதை, இந்த மலைகளுக்கும், காற்றுக்கும், மரங்களுக்கும், ஏன் இந்த காட்டுக்கே.
அவ்வளவுதானா? என்றாள்.
எனக்கும்.
அவள் சிரித்தாள். முத்தமிட என் உதடுகள் குவிந்ததும், அவள் உதடுகள் அன்னிச்சையாய் விலகிக்கொள்ள சற்று ஏமாற்றம் மிஞ்சியது.
நிலவு பலாயிரம் ஆண்டுகள் பூமியின் மீது தன் காமகதிர்களைப் பொழிந்தும் குறைந்திடாது என் மேலும், அவள் மேலும் வீசியது. அதன் ஒளி ஒருவித மயக்குவதாய், குளிர்ந்து கிளர்ச்சியுட்டுவதாய் இருந்தது.  வெண்ணிலவு வானத்தில் அக்கினி குண்டமாக எறிய , அவள் கைகள் என்னுடன் கூட, நடந்துகொண்டிருந்தோம் அந்த மலையின் கண்களைச் சுற்றி. வெண்மலர்களால் வானத்து தேவர்கள் ஆசிர்வாதம் செய்தனர். மரங்களிலிருந்து எழும் காற்று மத்தளமாய் முழங்கிற்று. இரவு பூச்சிகள் வாழ்த்தொழிகள் பாட எங்கள் காதல் நிகழ்ந்துகொண்டிருந்தது.
சிரமப்பட்டு ஏறி சிறுமலை மேல் அமர்ந்தோம். எதிரே அசிங்கமாக குறைப்பிரசவத்தில் பிறந்ததுபோல கெஸ்ட் கவுஸ் தெரிந்தது. அதற்க்கு பின்னால் உயர்ந்த மலையில்  கருமையின் நிறம் துயிலுறங்கியது. என்றாலும் நிலவு வெளிச்சத்தில் மரங்கள் தெரிந்தன. மலை உச்சியிலிருந்து பெரிய கற்ப்பாறை உருண்டு வருவதுபோல யானைக்கூட்டம் நடந்துவந்தது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை, காட்டைப்பார்த்தவாறு உட்காந்திருந்தோம்.
மலையுச்சியில் மேகங்கள் மரங்களைத் தழுவதுபோல அவள் என் அருகில் தொட்டும், தொடாமலும் அமர்ந்திருக்கிறாள். வற்றாத சுனை நீர் சுரந்து, மலையின் கண்களில் நிறைந்து பிறகு ஆனந்தக் கண்ணீராய் மலைச்சரிவுகளில் ஓடை ஓடியது. அதுபோலவே என் ஆராக்காமமும் இவளாலே வற்றாது சுரக்கிறது. மேகம் மரத்தின் தழுவுளால் கசிந்துருகி மழையானலூம், மனமாறி மேகமாகவே நின்றுகொள்ளும். அவளும் முத்தங்களை பொழிந்துவிட்டு சட்டென நிறுத்திக்கொள்வாள் காரணமின்றி. மனம் கிடந்து தவிக்கும். காற்றைப்போல பாய்ந்து மலையிலிருந்து கீழே விழும் அடுத்த கணம் கூச்சலோடு மேல் எழும்.
பனிமிகுந்து வானத்தையும் மலையையும் இடைவெளியில்லாமல் நிரப்பியவாறு, எனக்கும் அவளுக்குமான இடைவெளி உடலென்னும் பருப்பொருளாள் நிரம்பியுள்ளது. ஓருயிராய் ஆக துடிக்கும் காமம், தோற்று இரண்டு உடலானது. இரவிலே கலந்த நிலவொளி வீரியம் குறைந்து ஒளிர்கிறது. காமவிதை உடலுக்குள்ளே விதைக்கப்பட்டிருக்குமா என்ன? உடைத்துக்கொண்டு வெளியேறவே பார்க்கிறது. மரம், செடி, கொடி, புல் எல்லாம் மலையின் காமம். வளர்ந்து வானத்தை தழுவப் பார்க்கிறது. நாகரிகம் என்று சொல்லி அதை வெட்டி, வீடாக்குகிறார்கள் இந்த அற்ப்ப மனிதர்கள். வண்டினங்கள் தேவதூதுவர்கள், மலையிலே வந்திறங்கி தெய்வகாரியங்கள் செய்கிறது. மேகங்கள் உயரமான மரங்களை மட்டும்தான் தழுவிச் செல்கிறது, மற்றவற்றை தவிப்பிலே தள்ளுகிறது.
நெருப்பேன உடல் எறிய, அருகினில் காமக் குளிர்காயும் அவள். உடைந்து போன மாதுளை இதழ்களால் என் கன்னங்கள் சிவக்க முத்தங்கள் கொட்ட,  வேள்வியில் இட்ட நெய் போல அது காமத்தீயை அணையாது வளர்த்தது. மலையின் கண் இமைக்காது எங்கள் இருவரையும் பார்த்தது. அவளும் நானும் மங்கிய ஒளிக்குள் ஒருவர் மற்றவருக்குள் ஒடுங்கிப்போக முயன்றுகொண்டிருந்தோம். சில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழுந்தது, இருவரையும் கண்டு நிலவு காமமுற்று துணை தேடி நகர தொடங்கியது. காமம் வழிந்தோடி ஓடையாகி, காடெல்லாம் நிறைந்து, ஆறாகி பின் கடலில் கலந்தது. ஆவியாகி வானுக்கும் சென்றது. யாதும் காமமாகி நின்றது.
    

Tuesday, September 6, 2016

நான் என்ன செய்யட்டும்?

பஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது.  அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு  தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற  இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டமாற்று செய்ய வேண்டுமென்றால் என் மனதைதான் காற்றுக்கு மாற்றாக இந்த நிமிடத்தில் தர முடியும். ஆனந்தத்தில் கூத்தாடியது. அமைதியானது.
மெதுவாக எனக்கு இருபுறங்களிலும் இருக்கிற வானுயர்ந்த மரங்கள் ஓடத் தொடங்கியது. கூன் விழுந்த சீட் மட்டும் காலியாக கிடந்தது. மேகங்கள் ஆசிர்வாதமாக சில மழைத்துளிகளை என் கைகளில் கொட்டியது. வெளியே தலையை விட்டு எட்டிப்பார்த்தேன், உயர்ந்த மரங்கள் மேகங்களுக்குள் சென்று தீர்ந்தங்களை தெளித்தது போல தோன்றிற்று. காற்று தொடர்ந்து என்னை குளிரூட்டும் வேலையில் முழ்கிப்போயிருந்தது. என் கையை ஜன்னலின் இரும்புக் கம்பியில் கெட்டியாக பிடித்து, மனம் நழுவி விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.
யூக்கப்லட்டிஸ் மரத்திலிருந்து வரும் வாசனை மனதை கிளர்ச்சியுற செய்தது. கொல்லிக்கட்டை போல அணைந்து கொண்டிருக்கின்ற சூரியன் மரங்களின் இடைவெளியில் ஒளிந்து விளையாடினான். பஸ் மூங்கில், சவுக்கு மரங்களின் நிழல்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பஸ்ஸின் நிழல் அம்மரத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொண்டே போனதை கூன் விழுந்த சீட் ஜன்னலின் வழியே தெரிந்தது. கொக்குகள் போருக்கு ஆயுத்தமாகி வரிசையில் அணிவகுத்துச் சென்றது. நானும் பொறுத்து பார்த்தேன் அணிவகுப்பு முடிவதாய் தெரியவில்லை. தலையை வெளியே நீட்டியும், எதிர்புற ஜன்னல் வழியே பார்த்தும் கண்டடைய முடியவில்லை, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்த போதுதான் தெரிந்தது, முழுநிலவிலிருந்து ஒவ்வொன்றாய் அனுப்பப்படுவது. கொக்குகளின் வியூகம் மலைக்கும்படி தோன்றிற்று. படைத்தளபதி யாரென்று கண்டுபிடிக்க கூடாது என்று மாறி மாறி ஒவ்வொரு கொக்கும் படைக்கு தலைமை தாங்கிச் சென்றது. நிச்சயமாக இவைகள் கட்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூரியனை மீட்டுவிடும். அதற்க்குள் நீண்ட மரங்கள் எல்லாம் ஓடி புல்வெளிப் பரப்பு வந்திருந்தது. தூரத்தில் தெரிந்த மலைகள் வெய்யிலின் கொடுமை தாளாது அணிந்துகொண்ட மேக குல்லாவை இன்னும் கலட்டாமல் வைத்திருந்தது. பூமி, வானத்தைப் பார்த்து காமத்தால் பொங்கும் போது சில சமயம், வானத்தை தழுவும் உயர்ந்த மரமாகவும், மறு சமயம் பூமியை ஒட்டி நிற்க்கும் புல்லாகவும் பொங்குவது அதன் காமத்தைப் பொறுத்தது. சிறிது நேரம் புல்வெளிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன். பணைத்தோள் வில்போல் வளைந்து, இருகரங்கள் அம்பாய் வானத்தைப் பார்த்திருந்தது. அவள் முதுகினில் கார்கூந்தல் துயிலூரங்கியது. புல் ஆசனத்தில் வீற்றிருந்தாள். தோளின் இருபுறமும் சரடு ஒன்று முன்னழகையும், பின்னழைகையும் மறைக்கும் திரையை இணைத்திருந்தது. அந்த சரடு துலாத்தட்டைப் போல முன்னழகையும், பின்னழைகையும் எடை போட்டது. பின்னழகு  மிகுந்து அதன் திரை சற்றே கிழிறங்கியது அதன் வழியே அவள் அழகு வழிந்தோடியது. என் கண்கள் அவற்றை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் தின்றது. நொடிப்பொழுதில் மறைந்து போனாள். திரும்பவும் சில நொடிகளில் என்னுள்ளே எழுந்தாள். மனதில் எண்ணங்களைக் கூட்டி கூட்டி பெரும் கற்குவியல் போல எனக்கு தெரியாமல் அடுக்கிவிட்டேன். சட்டென விழித்ததும் எடையின் வலி தாளாது துன்பத்தை முளைக்கவிட்டது. துன்பம். துன்பம் என்று மனம உழன்றாலும், வேண்டாம், வேண்டாம் என்று ஊமை மனம் கத்தினாலும், யானையைச் சுத்தும் உண்ணியைப் போல அவளது எண்ணங்கள் என்னைச் சுற்றி வந்தது. காற்றின் குளிர்ச்சியும், பூமியின் காமத்தையும், சூரியனையும், சந்திரனையும், எனது காமம் வென்று அதனை சாதாரண பொருளாக மாற்றியது. அவைகள் அற்பமானவைகளாக தோன்றிற்று. இரசிப்பதற்க்கு அவளைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றே நினைத்தேன். புல்வெளிகளின் நடுவே வேப்ப மரத்தின் அடியில் உடுக்கை அடித்துக்கொண்டு ஒரு கூட்டம் சாமியாடியது. உடுக்கையின் அதிர்வு என் மனதை பிரட்டிப்போட்டது. பெண்னோருத்தி நெற்றியேங்கும் திருநீரு பூசி கழுத்தில் மாலையிட்டு ஆடிக்கொண்டிருந்தாள். கிழவன் ஒருவன் இடுப்பில் துண்டைக்கட்டியவாறு பாடிக்கொண்டிருந்தான்.  உடுக்கையின் அதிர்வு மிக அருகே வந்ததும்,  அந்த இடமே ஒரு அதிர்வுக்கு உள்ளானது போல தோன்றிற்று. மனம் வழுவி, வெறிகொண்டு, நழுவி சுயநிலைக்கு வருவதற்க்குள் அந்த காட்சி வெகு தூரத்தில் விலகியது. எல்லை அம்மன் அவள்.
புல்வெளிகள் சிறு சிறு கட்டிடங்களாய் அங்கொன்றும், இங்கொன்றும் முளைத்திருந்தது. புல்வெளிக்கு நடுவே யார் விதை போட்டு வளர்த்திருப்பார்கள் என்று தோன்றிற்று. பொங்கும் காமத்தை காங்கீரிட் போட்டு மறைத்தவர்கள் அவர்கள், நிச்சயம் பூமியின் கோபத்திற்க்கு ஆளாவார்கள். அதற்க்குள்ளாகவே புல்வெளிகள் குறைந்து கட்டிடம் ஒன்றை ஒன்று நெருங்கிக்கொண்டிருந்தது. பின்பு மெதுவாக வளரத்தொடங்கியது. காட்சிகள் தொடர்ந்து மாறிய வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் காட்சிகள் பிரேக் போட்டு நின்றுகொண்டது. வண்டிகள் முந்திச் செல்ல எத்தனித்து தோற்று நின்றன. காற்று சூடாகி எறிந்தது. ஜன்னலின் லாக்கை விடுவித்து மூடினேன். வேண்டாம் என்றாலும் கண்ணாடி வழியே அந்த காட்சி தெரிந்தது. பச்சை நிற விளக்குக்கு பல கால்கள் தவமிருந்தன பிரேக்கிலும், எக்ஸ்லேட்டரிலும்.  ஒருவழியாய் நான் இறங்கவேண்டிய இடம் வந்தது, இறங்கிக்கொண்டேன். பஸ் கருப்பு நிற புகையை கக்கியவாறு நகர்ந்தது. பர்ஸையும், தோள் பேக்கும் இருக்கிறதா என சோதனை இட்டுக்கொண்டேன். டம். . என்ற சத்தம் கிட்டத்தட்ட என் சப்த்த நாடிகளையும் ஒடுங்கிவிடச் செய்தது. ஆ. . என்று தொடர்ந்து இனக்குரலில் கத்தும் சத்தம். கிட்டத்தட்ட உறைந்தேவிட்டேன். கீழே விழுந்த பைக்காரன், தன் பொண்டாட்டியைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான். சாலையில் பைக்கிலும், காரிலும் போவோர் அவனை சுற்றிக்கொண்டும், நிற்க்காமலூம் சென்றனர். கீழே விழுந்தவனைப் பார்ப்பதும், கைக் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. அவன் போவோரைப் பார்த்துக் கதறினான். எந்தவித எதிர்வினையும் இல்லை. அவள் இறந்துவிட்டாள் என நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும்?   விழுந்தவர்களை காப்பாற்றலாமா? வந்த பஸ்ஸை வேர காணோம்.பஸ் வந்தால் திரும்பிவிடலாம். யாருமே காப்பாற்றபோது நமக்குமட்டுமென்ன? ஆனால் பாவம் தானே. நான் என்ன செய்யட்டும்?