Skip to main content

Posts

Showing posts from 2017

தூயனின் இருகதைகள்

தூயனின் சிறுகதைகளை ஜெயமோகனின் இணையதளத்திலிருந்த கட்டுரை மூலமாக சென்றடைந்தேன் . http://thuyan.in/category/thuyans-short-stories/ கதைகளுக்கான என்னுடைய விமர்சன அளவுகோல் என்ன என்பதை சொல்லிவிட்டு அதைப் பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்குமென நினைக்கிறேன் . கதையை படிக்கும்போது அதனுள்ளே எளிதாக நுழைந்துவிட வேண்டும் . அதற்க்கு வடிவ ஒழுங்கு , கதையின் திருப்பம் என எத்தனையோ தொழில்நுட்பம் இருந்தாலும் அது எழுத்தாளரைப் பொறுத்தது . படிக்கும்போது அது வாசகனுள் நிகழ வேண்டும் . தொழில் நுட்பங்களை வரையறுத்துக்கொண்டு சிறுகதை எழுதப்படவில்லை . அதே நேரம் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக்கூடியது . அதனால் படித்து முடித்தபிறகு அதைப் பற்றி கணக்கு போடாலாம் என்பது என் எண்ணம் . நன்றாக இருந்தால் , புதிதாக எதுவும் இருக்கிறதா என பார்க்கலாம் . இல்லை என்றால் , பழைய தொழில்நுட்ப்பத்தில் என்ன குறைகிறது என மதிப்பிடலாம் .   கதை முடிந்த பிறகு அது தொடர்ந்து மனதுக்குள் குடைச்சலை உண்டு பண்ணுகிறதா என பார்க்க வேண்டும் . கதையில் சொல்லாத ஒன்றை விரித்தேடுக்க ஒவ்வொரு வாசகனுக்கும் இடமளிக்க வேண்டும் ( ஜெ சொன்னது போல வ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ

குற்றமும், தண்டனையும்

இனிமேலும் சேர்ந்து வாழமுடியுமேன தோன்றவில்லை. வெறுப்பை உமிழும் அவள் கண்கள் ஞாபகத்திற்க்கு வந்தது. ஒருவித ஈர்ப்பையும், அன்பையும் சொறிந்த அதே கண்கள்தான் நான்கு வருட திருமணத்திற்க்கு பிறகு இப்படி மாறிப் போனது. எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நான் பல காரியங்களை அம்மா, அப்பாவின் ஆசைக்காகவே பண்ணியிருக்கிறேன். அதில் கல்யாணமும் ஒன்று. சொல்லப்போனால் எனக்கு இஷ்டமே இல்லை. ஒன்றை மறுக்கும் போதேல்லாம், அதைச் செய்தாக வேண்டி வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூடம் போவது, வேலைக்கு போவது என அதன் பட்டியல் நீளும். யாருக்காக இதைச் செய்கிறேன் என்று சத்தியமாக விளங்கவில்லை?  ஆனால் அது அம்மா, அப்பாவின் விருப்பம். ஏன் அது அவர்கள் விருப்பமானது என எனக்கு தெரியாது. காற்றடிக்கும் திசையில் மேகங்கள் போவதைப் போல நானும் மற்றவர்களைப் போல நகர நிர்பந்திக்கப்பட்டேன். புதிதில் இருக்கும் கவர்ச்சியும், சுவாரஸ்யமும் என்னை சில நாட்க்கள் கட்டிப்போட்டது என்னவோ உண்மைதான். தேக்கிவைக்கப்பட்ட அணையின் நீர் மட்டம் எப்படி வரவு இல்லை என்றால் வடிந்து இல்லாமல் ஆகுமோ அதே போலதான்  அந்த கவர்ச்சியும், சுவாரஸ்யமும் ஆனது. பாடியிலிருக்கும

திருக்குறள் திறப்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -     அதிகாரம்:அன்புடைமை குறள் எண்: 71 எதேற்ச்சையாக ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இந்த குறளை பார்க்க நேர்ந்தது . படித்த உடன் குறள் என்னை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது . தாழ்ப்பாள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எங்கள் வீட்டின் இரும்பு தாழ்தான் நினைவுக்குவந்தது . வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம் இல்லை என்றால் விடுவித்துவிடலாம் . அடைக்குந்தாழ் என்ற சொல்லாடல் வேண்டுமென்றே அடைத்துக்கொண்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறது போலும் . பொதுவாக பெற்றோருடன் சண்டை வந்தால் , சிறுவர்கள் அவர்களுக்கு தோன்றும் எதாவது ஒன்றைச் செய்து எதிர்ப்பு காட்டுவார்கள் . சாப்பிடமாண்டேன் என அடம்பிடிப்பது , தரையில் படுத்து உருள்வது உட்ப்பட .   அன்று எனக்கும் என் பாட்டிக்கும் சண்டையேன நினைக்கிறேன் . கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தி தாழிட்டுப் படுத்துக்கொண்டேன் , சிறிது நேரம் கழித்து திறந்தால் போகிறது என்றேண்ணிக்கொண்டேன் . விளையாண்ட களைப்பு அசந்து தூங்கிக்போயிருக்கிறேன் . பாட்டி முதலில் கெஞ்சிப் பார்த்திரு

பல்லவர்களின் பாதை – 1

மழை பெய்ந்து ஓய்ந்த அடுத்த நாள், உச்சி வெய்யிலில் நண்பர்கள் ஐவர் மகேந்திரவாடியை நோக்கி இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வழியாக பெங்களூர் நெடுஞ்சாலையை திருப்பெரும்புதூரில் பிடித்தோம். கிட்டத்தட்ட நாற்ப்பது கி.மீட்டர் தூரம் அந்த சாலையிலேயே பயணித்தோம். காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலைக்கு அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வலதுபுறம் திரும்பி, கிராமப்புறச் சாலையின் வழி நகர முற்ப்படும் போதுதான் மதிய உணவைப் பற்றி எண்ணம் எழுந்தது. வேறு வழியின்றி நெற்க்கதிர்கள் பூத்துக்குலுங்கிய சாலையினூடே வாகனம் சீறிப்பாய்ந்தது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனேகமாக எல்லோருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது. பிள்ளையார்பட்டி கிராமத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தண்ணீர்ப் பாட்டிலும், பிஸ்க்கட் பாக்கெட்டும் வாங்கி சாப்பிட்டோம். பக்கத்தில் ஹோட்டல் எங்கே என்று கேட்டதற்க்கு, இன்னும் மூன்று கி.மீட்டர் தூரத்தில் இருப்பதாக அங்கிருந்த விடலிகள் சொன்னனர். பிஸ்க்கட் வேண்டாமேன நண்பர் ஒருவர் இதைக் கேட்டு மறுத்துவிட்டார். கூகுள் மேப்தான் எங்களுக்கு வழிகாட்டி. மணப்பாக்கம் வந்ததும் சற்றே பெரிய ஊர் என்று தோ

பார்த்தசாரதி நகர உலா

பார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்கமாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.   யார் நீ? சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ். திருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி. எங்க போய்டு வற்ற? ம்.. அதட்டினார். கோயில்லே இருந்து வற்றேன். இன்னாரத்துல கோயில்லேன்ன வேலை? திருடிட்டு வற்றயா? கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார். இல்லை கோயில்ல நின்னிருந்த.. மேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பார்த்தசாரதியோ, என்னடா இது? குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார். நடை சாத்துனதுக்கி

காஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய  ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் நலமா? சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்  முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன். வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சி

ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் . நலம் என எண்ணுகிறேன் . அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது . இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம் , ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம் . அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன் . அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது . நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன் . அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார் . முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும் . அது பிஸ்டனுக்கும் , சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும் . பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால் ,   அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது . பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி , அது நகர்ந்து முன்நோக்கி வரும் . தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எற

தெரிவு

எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. தாம்பராஸ் செய்தித்தாள் காற்றுக்கு ஆவலாய் எதனையோ எட்டிப்பார்த்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டை. மனதை ஒருவாறு தெளிவாக்கிக்கொண்டு தொண்டையை கனைத்தேன். வார்த்தைகள் வர மறுத்தது. இரண்டு சிங்கங்கள் தங்க நிற புல்வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. கூந்தல் போல செம்பட்டை பிடரி மயிர் தொங்க, இரண்டு கால்களால் சண்டை போட்டது. மூக்கில் இரத்தம் கொட்ட, முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்டம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்ததும். அது அதற்க்கெனவே காத்திருந்த பெண் சிங்கத்துடன் நகர ஆரம்பித்தது. அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்கா