Pages

Monday, March 20, 2017

பார்த்தசாரதி நகர உலா

பார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்கமாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.  

யார் நீ? சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ்.

திருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி.

எங்க போய்டு வற்ற? ம்.. அதட்டினார்.

கோயில்லே இருந்து வற்றேன்.

இன்னாரத்துல கோயில்லேன்ன வேலை? திருடிட்டு வற்றயா? கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார்.

இல்லை கோயில்ல நின்னிருந்த..

மேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பார்த்தசாரதியோ, என்னடா இது? குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார்.

நடை சாத்துனதுக்கி அப்புறமா கோயில்ல என்ன பண்ணிக்கிட்டு இருந்த? சட்டை, பை எல்லாத்தையும் திறந்துகாட்டு. லத்தியை ஓங்கி மிரட்டிக்காட்டினார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என பார்த்தா மெதுவாக வினவினார்.

ம்ம்..ஒரு கோடி ரூபா கொடேன்..எகத்தாளமாய் சொல்லிவிட்டு, சிகெரட்டை பற்ற வைத்தார் கான்ஸ்.

பார்த்தா தனது இடது பாக்கெட்டில் கையைவிட்டு புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டாய் கான்ஸ் கைகளில் திணித்தார்.

வாயிலிருந்த சிகரேட் நழுவது தெரியாமல், கான்ஸ் அப்படியே மலைத்துப்போய் நின்றிருந்தார். பணத்தையே அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றுருந்தார்.

இதுதான் நல்ல சமயமென நினைத்து, மெல்ல நழுவி நகருக்குள் நுழைந்தார் பார்த்தா. உதடுகளில் லிப்டிக் போட்டு, சேலையை இடுப்புக்கு கிழே கட்டியிருந்த பெண் ஒருத்தி இவரையே பார்த்து சிரித்தாள். இவர் பதிலுக்கு சிரித்தார். மோகன புன்னகை. அவ்வளவுதான், அவள் பக்கத்தில் வந்துவிட்டாள்.

என்னய்யா! ஆயிர்ரூபா..என்றாள்.

கடவுள் சிரித்தார்.

எண்ணூரு…

மறுபடியும் சிரித்தார்.

கடசியா சொல்லு எவ்வளவு தா தருவனு? அவள் சற்று ஏமாற்றம் கொண்டவளாய் கேட்டாள்.

அதற்க்குள் போலீஸ் சீப் ஒன்று சீறிக்கொண்டு அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றது.

இவனுக வேற வந்துடானுக..தலையில் அடித்துக்கொண்டாள்.

அதே கான்ஸ்ம், இன்னும் நான்கு போலீஸ்சாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.

சார் இவன்தா நா சொன்ன ஆளு என கான்ஸ் பார்த்தாவை அடையாளம் காட்டினார்.

கோடி ரூபா வச்சிருக்கிறாங்கிறவன், போயும் போயும் தெருவுல நிக்கிறவகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்? நிசமா இவனதா பார்த்தயா என்றார் இன்ஸ்.

பார்த்த ஓடிவிடாமல் இருக்க நாலாபுறமும் போலிஸார் நின்றுகொண்டனர்.

 இன்னும் எத்தனை கோடி வச்சிருக்கடா. ...என்றார் இன்ஸ்.

வயிற்றில் கையை வைத்துக்கொண்டு அடக்க முடியாமல்  சிரிக்கத்தொடங்கினாள்.

இன்ஸ் கோபம் தலைக்கேறி அவள் வயிற்றின் மேலே பூட்ஸ் காலால் ஒரு மிதி வைத்தார்.  கீக் என்று கத்திக்கொண்டு அவள் தரையில் சாய்ந்தாள்.

கோபத்தால் அவர் தலையை பறக் பறக்கெனச் சொறிந்தார். சிவப்பு நிற கொண்டை விளக்கு அவர் முகத்தில் அடித்து சிவப்பாய் காட்டியது. ஆள் பார்க்க நல்ல ஆஜானுபாகுவான அனுமார் மாதிரி இருந்தார். அவளிடமிருந்து சத்தமெயில்லை.

 கான்ஸ் போய் அவள் மூக்கில் நடுவிரலை வைத்துவிட்டு, தொப்பியை கழட்டியவாறு இன்ஸிடம் வந்து, போய்டாரு சார் என்றார்.

நால்வரும் ஓடிப்போய் அவளை சோதனை போட்டனர். இன்ஸ் நகத்தைக் கடித்து துப்பினார்.

பார்த்தா மறுபடியும் நழுவ வாய்ப்பு கிடைத்ததும், தப்பி நகருக்குள் ஓடிவிட்டார்.

கால் போன போக்கில் நடந்தார். வழியில் வெளிச்சத்தைப் பார்த்ததும், உள்ளே புகுந்துவிட்டார். அங்காங்கே தூங்குபவர்கள், அரைத்தூக்கத்தில் செரில் உட்காந்திருப்பவர்கள், இரயில் தாமதமானதை தாங்காமல் நடந்துகொண்டிருப்பவர்கள் என இருந்தது சென்ரல் இரயில் நிலையம். பார்த்தா தூங்கும் கூட்ட்த்தில் கால் வைத்து போகும் போது யாரோ ஒருவன் மேல் கால் வைத்துவிட்டார். அவன் தூக்கத்திலிருந்து எழுந்து அடிக்க ஓடிவந்தான். பார்த்தா தப்பி வந்த வழியே வெளியேறினார். அவர் வெளியேறவும், போலீஸ் சீப் வரவும் சரியாக இருந்தது. துரத்தி வந்தவன் சட்டென நின்றுகொண்டான். பார்த்தா இடப்பக்கமாக வளைந்து லோக்கல் இரயில்வே ஸ்டேசனுக்கு ஓடினார். சிவப்பு நிற வெளிச்சம் கொஞ்ச நேரம் அவரை பின் தொடர்ந்தது. துரத்துவது ஓய்ந்த்தும், அவர் பாலத்தைக் கடந்து பார்க் ஸ்டேசனுகுப் போனார்.

ஸ்டேசன் படிகளில் ஏறும்போது பிச்சைக்காரன் ஒருவன் தருமம் பண்ணச் சொல்லி மன்றாடினான். சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி, பசி தாங்க முடியல என காலைப் பிடித்துகொண்டான்.
பார்த்தா தன் வலது பக்க பாக்கெட்டில் கைகளை விட்டு சில ஐநூறு ரூபாய் கட்டுக்களை பாத்திரத்தில் இட்டார். அவ்வளவுதான் தாமதம், பார்த்தாவின் காலை அவன் வாரிவிட்டு அவர் மேல் ஏறிக்கொண்டான். வைத்திருந்தா பாத்திரத்தாலே பார்த்தாவை நய்யப் புடைத்தான். வலது, இடது என எல்லா பாக்கெட்டையும் தேட ஆரம்பித்தான். எதுவும் கிடைக்காத்தால், பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கிக் காட்டி மிரட்டினான்.

இன்னும் எங்க பணத்த வைச்சிறுக்க சொல்லு சீக்கரமா..என கத்தினான்.

போலிஸ் சீப் கொண்டை விளக்கோடு அவர்கள் அருகில் வந்து நின்றதுதான் தாமதம், பார்த்தா அவனை கீழே தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தார். பிச்சைக்காரன் போலீஸ் சீப்பின் சத்தத்தில் பய்ந்த சந்தர்ப்பம் அவருக்கு சாதகமாய்ப் போனது.

 பிச்சைக்காரன் தட்டிலிருந்த பணத்தை இன்ஸ் எடுப்பதும், அவன் விட்டுக்கொடுகாமல் சண்டைக்கட்டுவதும், அவர் ஓடும் போது திரும்பி பார்த்த்தில் தெரிந்தது.

போதும் நகர் வலம் என பார்த்தா முடிவு செய்வதற்க்குள் நகரம் காலை வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது.

வந்த கலைப்பை ஆற்ற, பார்த்தா டீக்கடையில் போய் சூட டீ சொல்லி காலார பென்ஞ்சில் அமர்ந்தார்.

எதேர்ச்சாய் அவர் பார்வை கடை போஸ்டரில் விழுந்தது.

சீரியல் கில்லர் – விபசாரி மற்றும் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம். குற்றவாளி பெயர் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடல்.
 
இதைப் பார்த்ததும், பார்த்தாவுக்கு பகீர் என்றது. டீக்கடையில் இருந்து எழுந்து கோயிலுக்கே போய்விடலாம் என நகர்ந்தார். டீக்கடைக்காரன் அவரை வசை மொழிகளில் திட்டுவதை எல்லாம் கவனித்தவராய் தெரியவில்லை.

தெப்பக்குளத்தின் மேற்க்கு வாசல் வழியாக பிரகாரத்துக்குள் நுழைந்தார். மணி எட்டு இருக்கும். சூரியன் எழுந்து எல்லோரையும் சுட்டுக்கொண்டிருந்தான்.

அவர் நேராக கற்ப்பகிரகத்திற்க்குள் போக முற்ப்படும்போது தடுக்கப்பட்டார்.
இது ஸ்பேசல் தரிசனம். டீக்கெட் வாங்குனாத்தா இந்த வழி. போ போயி அந்த வரிசைலை நில்லு என் அங்கிருந்த ஆசாமி துரத்தினார். பார்த்தா என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம தரிசன வரிசைக்கு நகர்ந்தார்.  

இன்ஸ்ம், கான்ஸ்ம் அங்கு ஸ்பேசல் தரிசனத்தில் நின்று எதையோ வேண்டிக்கொண்டிருந்தார்கள்.


Saturday, March 18, 2017

காஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய  ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் நலமா?

சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்  முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன்.

வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சிலைகள் பற்றியும் அது அழிவது பற்றியும் பேசினீர்கள். எதுக்கு இவரு காலையிலேயே இதைப் போய் பேசகிறார் என்று அப்போது தோன்றிற்று. உண்மையில் அதன் முக்கியத்துவம் இன்று தான் விளங்கியது. இரண்டாவது முறை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது முதல் முறை சுற்றும் போது எத்தனை சிலைகள் பார்க்காமலே விட்டுவிட்டேனேன்று. பலவித நடனங்கள், குதிரைகள், கடவுள்கள். குறிப்பாக குதிரையில் அமர்ந்து இருக்கும் ஒருவரின் சிலையை பல்வேறு கோவில்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் மாடம்பாக்கம் புராதான சிவன் கோவிலிலூம் அதை கண்டு இருக்கிறேன். அது கட்டப்பட்டது கிபி 9 நூற்றாண்டுவாக்கில். அதே போல் கோர முகமும். இராமானுஜர் சிலை இருப்பதால் அந்த மண்டபம் அமைத்தது கிபி 12 நூற்றாண்டாக இருக்குமா? (அவர் வாழ்ந்த காலம் 12 நூற்றாண்டு என நினைக்கிறேன்). அதனைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி. வேறு உலகத்தில் இருந்தது போல தோன்றிற்று, சிலைகளை பார்த்துவிட்டு வெளிவரும்போது. கலைகளின் உச்சம். மனம் மகிழ்ந்தது. கோவிலுக்குள் சென்றேன்.

சிகிலடைந்த ஓவியங்கள், அற்புதமான சிலைகள் எங்கும் நிறைந்து கிடந்தது. வரதராஜரை சேவிக்க படியேறி உள்ளே நுழைந்தேன். கருநிற மேனியன் நின்றிருந்தான். கலைகள் தந்த மலைப்பில் அவனைப் பார்த்தேன். நன்னா வேண்டிக்க என்றாள் அம்மா. கண்களை மூடி, வேண்டுவது என்வென்று தெரியாமல் விழித்தேன். உச்சகட்ட கலைகளின் நடுவே சூன்யமானவர், அற்ப்பத்தனமாய் வீடு வேண்டும், கார் வேண்டுமேன வேண்டுவோரைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது அது. இந்த சூன்ய புன்னகையிலிருந்துதான் அற்புதமான கலைகள் தோன்றியிருக்குமோ என நினைக்க வைத்தது. எறிகின்ற சுடரின் நடுவே சூன்யமான கடவுள், அதைச் சுற்றி நெருப்பு. மையத்தை விட்டு விலக விலக அதன் சுடர் அடர்த்தி குறைந்து, இறுதியில் மறைகிறது. அதைப் போலத்தான் பெருமாளும் அவரைச் சுற்றி சிலைகளும் பிறகு அடர்த்தி குறைந்த இவ்வுலகும். அல்லது இப்படியும் கொள்ளளாம். அடர்த்தியில்லாத இந்த உலகம், மையத்தை நெருங்க நெருங்க அடர்த்தி கூடி மகிழ்ச்சியுற செய்யும் சிலைகள், மையத்தில் ஆனந்தம் தரும் சூன்யம். மிகப்பெரிய அதிர்ச்சி, ஒன்றுமே இல்லாத சூனியத்திற்க்கா இவ்வளவு கலைகளும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது?

ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது.

இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம், ஈஸா வாஸ்ய உபநிஷத்ஓர் அனுபவம். அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன். அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது.

நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன். அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும். அது பிஸ்டனுக்கும், சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும். பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால்,  அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது.


பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி, அது நகர்ந்து முன்நோக்கி வரும். தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எறிந்த வாயு, முன்னால் இருப்பது எறிவதற்க்காக காத்து நிற்க்கும் எரிபொருள். நடுவில் அது எறித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படிமம், என்னை முதல் மந்திரத்துடன் பிணைத்தது.


                                                  
எறிந்த வாயுவெல்லாம் இறந்த காலம். எறிவதற்க்காக காத்திருக்கிற எரிபொருள் எதிர்காலம். இந்த கணம் எறிகிறதே அதுதான் நிகழ்காலம். எறிக்கிற அதுதான்ஈஸா” . அது எல்லா எறிபொருளிலும் புதைந்து உள்ளது. எறிகிற நேரம் வந்ததும், அது தன் சக்தியைப் பெற்று எறிந்து அடுத்த நிலைக்கு அதாவது வெளியேற்றப்பட வேண்டிய வாயுவாக மாறிவிடுகிறது. அதே எரிபொருள்தான், ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது.  

கிடைத்த சக்தி இருக்கிறதே அது என்னால்தான் என எரிபொருள் சொந்தம் கொண்டாட முடியாது அல்லது கர்வம் கொள்ள முடியாது. காரணம் தீசுவாலை (ஈஸா) பற்றிக்கொண்டால்தான் சூடாகி வெடித்து சக்தியை தர முடியும். இல்லை என்றால் அது வெறும் எறிபொருளாய் காலம்புறாமும் இருந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை எறிந்து முடித்துவிட்டால், அதற்க்கான சக்தியை இழந்துவிட்டதாய் அர்த்தம்.

தான் என்கின்ற கர்வத்தை விட்டு ஒழித்தால்தான், ஆனந்தமாக இந்த சக்தியை அனுபவிக்க முடியும். ஆம் இந்த சக்தியாருடையது? நமக்குள்ளே ஒழிந்திருக்கிற ஈஸாதானே.

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கின்கா ஜகத்யம் ஜகத்
தேனா த்யக்தேனா புன்ஜிதா
மா க்ராதா காஷ்ய ஸ்வித்தானம்.

-             -  ஈஸா வாஸ்ய உபநிஷத்

நன்றி உங்களுக்கும், சூத்ரதாரிக்கும், சுவாமிஜி வியாச பிரசாத் மற்றும் நித்திய சைத்தன்ய யதி அவர்களுக்கும்.

என் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்.

நன்றி மறுபடியும்,

மகேந்திரன்.