Skip to main content

Posts

Showing posts from July, 2017

திருக்குறள் திறப்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -     அதிகாரம்:அன்புடைமை குறள் எண்: 71 எதேற்ச்சையாக ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இந்த குறளை பார்க்க நேர்ந்தது . படித்த உடன் குறள் என்னை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது . தாழ்ப்பாள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எங்கள் வீட்டின் இரும்பு தாழ்தான் நினைவுக்குவந்தது . வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம் இல்லை என்றால் விடுவித்துவிடலாம் . அடைக்குந்தாழ் என்ற சொல்லாடல் வேண்டுமென்றே அடைத்துக்கொண்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறது போலும் . பொதுவாக பெற்றோருடன் சண்டை வந்தால் , சிறுவர்கள் அவர்களுக்கு தோன்றும் எதாவது ஒன்றைச் செய்து எதிர்ப்பு காட்டுவார்கள் . சாப்பிடமாண்டேன் என அடம்பிடிப்பது , தரையில் படுத்து உருள்வது உட்ப்பட .   அன்று எனக்கும் என் பாட்டிக்கும் சண்டையேன நினைக்கிறேன் . கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தி தாழிட்டுப் படுத்துக்கொண்டேன் , சிறிது நேரம் கழித்து திறந்தால் போகிறது என்றேண்ணிக்கொண்டேன் . விளையாண்ட களைப்பு அசந்து தூங்கிக்போயிருக்கிறேன் . பாட்டி முதலில் கெஞ்சிப் பார்த்திரு