Skip to main content

Posts

Showing posts from December, 2017

தூயனின் இருகதைகள்

தூயனின் சிறுகதைகளை ஜெயமோகனின் இணையதளத்திலிருந்த கட்டுரை மூலமாக சென்றடைந்தேன் . http://thuyan.in/category/thuyans-short-stories/ கதைகளுக்கான என்னுடைய விமர்சன அளவுகோல் என்ன என்பதை சொல்லிவிட்டு அதைப் பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்குமென நினைக்கிறேன் . கதையை படிக்கும்போது அதனுள்ளே எளிதாக நுழைந்துவிட வேண்டும் . அதற்க்கு வடிவ ஒழுங்கு , கதையின் திருப்பம் என எத்தனையோ தொழில்நுட்பம் இருந்தாலும் அது எழுத்தாளரைப் பொறுத்தது . படிக்கும்போது அது வாசகனுள் நிகழ வேண்டும் . தொழில் நுட்பங்களை வரையறுத்துக்கொண்டு சிறுகதை எழுதப்படவில்லை . அதே நேரம் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக்கூடியது . அதனால் படித்து முடித்தபிறகு அதைப் பற்றி கணக்கு போடாலாம் என்பது என் எண்ணம் . நன்றாக இருந்தால் , புதிதாக எதுவும் இருக்கிறதா என பார்க்கலாம் . இல்லை என்றால் , பழைய தொழில்நுட்ப்பத்தில் என்ன குறைகிறது என மதிப்பிடலாம் .   கதை முடிந்த பிறகு அது தொடர்ந்து மனதுக்குள் குடைச்சலை உண்டு பண்ணுகிறதா என பார்க்க வேண்டும் . கதையில் சொல்லாத ஒன்றை விரித்தேடுக்க ஒவ்வொரு வாசகனுக்கும் இடமளிக்க வேண்டும் ( ஜெ சொன்னது போல வ