Skip to main content

Posts

Showing posts from April, 2018

மீண்டும் ஒருமுறை

முன்னால் இருப்பவரின் நிழல் கவிந்து என் தலையை தொட்டது. நானும் அவரைப் போல தலையை மண்ணில் புதைத்து பிட்டத்தைத் தூக்கி கிடந்தேன். பலத்த அமைதி நிலவியிருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில், வாசனையில்லாததாக இருந்தது மண். களிமண் போல பார்வைக்குத் தெரிந்தாலும், அது இல்லை. வாசனையற்று இருந்தது. உருண்ட சிறிய மண் துகள்கள் உதடுகளைத் தொட்டும், கன்னங்களில் முத்தமிட்டும் வெம்மையைத் தந்துகொண்டிருந்தது. இன்ன காரணமென்று தெரியாது, சரிந்து கிடக்கிறேன். முன்னால் இருந்த சுவரில், இரு ஓரங்களில் சாளரங்கள் இருப்பதாய் தோன்றிற்று. அதன் உயரம் காரணமாக அதனைப் பார்க்க இயலவில்லை.   வெள்ளை நிற ஒளி அதனூடே படர்ந்து அறையை நிறைத்துவிட்டிருந்தது. பக்கவாட்டு சுவர்களும் அதே போல் உயர்ந்து கிடந்தது. கருப்புநிற தீற்றல்கள் ஆங்காங்கே அசிங்கமாய் அதன் மீது தெரிந்தது, எனக்குக் குமட்டல்களை வரவழைத்தது. சுற்றும் பார்த்தேன். அனேக நபர்கள் என்னைப் போலவே தலையைப் புதைத்து   கிடந்தனர்.   இங்கு எப்படி வந்தேன்? இதற்கு முன் எங்கே இருந்தேன்? நான் யார்? இவர்களுடன் என்ன பண்ணுகிறேன்? அடுத்து என்ன பண்ணவேண்டும்? யாரைக் கேட்கலாம் என்ற கேள்விகளை மனம் அடுக்கிக்